Posts

Showing posts from September, 2023

கட்டாரில் உடனடி வேலை வாய்ப்புக்கள் – இவ்வாரம் நேர்முக தெரிவு

Image
கட்டார் நாட்டில் சில முக்கிய தொழில்வாய்ப்புக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆட்கலை சேர்க்கும் நேர்முகத்தேர்வு எதிர்வரும் 28,29,30ஆம் திகதிகளில் கொழும்பு, நிப்போன் ஹொட்டலில் இடம்பெறவுள்ளது. தொடர்புகளுக்கு: 0112689979,  0777931777,  0777694777 (Nihaj Overseas) FULL DETAILS:  Front Desk Supervisor: 1. Basic Requirements of the job Front Desk Supervisor: Presentable and polite. Age to be between 27 and 33 years old. Height to be minimum 165 cm. Candidate shall not have any seen tattoo. Candidate shall have a clear medical history. Preferably non – smoking candidate 2. Knowledge, Skills, and Expérience Bachelor’s degree in hotel management or a related field preferred  Excellent verbal and written English communication skills, Arabic is a plus. Self-motivated & has Strong leadership and interpersonal skills Good time management and planning skills Problem-solving skills Must be able to facilitate and effectively execute training Ability to multitask and

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

Image
இன்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/0pkGw38 via Kalasam

மூடப்பட போகிறதா Brandix ...?

Image
மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னர் Brandix நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் மூடியுள்ளார். இதற்கிடையில், ஆடைத் தொழில் அடிக்கடி வீழ்ச்சியடைந்து வருவதாகவும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும் வேலை இழப்பு ஏற்படும் என்றும் Brandix குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரப் உமர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அறிவித்ததாக தொழில்துறை வட்டாரங்களில் இருந்து தககவல் வெளியாகியுள்ளது. வழமை போன்று ஆடை உற்பத்தி கோரிக்கை இல்லாமை, அமெரிக்க பொருளாதார நெருக்கடி, இலங்கையின் நிதி நெருக்கடியினால் டொலரின் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் இலங்கை ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர்கள் மூடப்படுவது வழமையான விடயமாகியுள்ளது. ஆசியாவில், Brandix நிறுவனத்திற்கு சொந்தமான பல தொழிற்சாலைகள் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் அமைந்துள

முஸ்லிம்களின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள், இறைவனிடமே கையேந்த, இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன

Image
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள். இயலாத நிலையில் இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி சுமார் 220 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார். அஸிஷா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் ஞாயிறன்று 10.09.2023 அன்று இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார நெசருக்கடியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் சன்மார்க்க் கடமை புரியும் இமாம்கள், முஅத்தின்கள், ஆலிம்கள் ஆகியோருக்கு உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. அரிசி கோதுமை மாவு அடங்கிய சுமார் ஒன்பது இலட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுகள் தலா 5 ரூபாய் பெறுமதியான பொதிகளாக பகிர்ந்தளிக்கப்பட்டன. நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபைர், இந்த நாட்டிலே இனங்களுக்கிடையில் பாரழிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இன்று பல பிரச்சி

🔴கோழி இறைச்சி விலை மேலும் குறையும்

Image
வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தலைவர் அஜித் குணசேகர, “வர்த்தக அமைச்சருடன் விவாதித்தோம்.அதன்படி உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம். இப்போது இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்து வருகின்றனர். அதன்படி, எதிர்காலத்தில் தட்டுப்பாடு இருக்காது. டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம். அதன்படி, விலை மேலும் குறையும். எங்களின் உற்பத்தியை தொடர அரசு எங்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. 1,100ஐ எட்டும் என நம்புகிறோம். மிகப் பெரிய பிரச்சினை சோளம், அதை இலங்கைக்கு கொண்டு வந்தால், சோளத்தை முழுமையாக உணவுக்காக பயன்ப

🔴தயாசிறி பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என 50 இலட்சம் பந்தயம்

Image
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்படுவதற்கு முந்தின நாள் இரவு ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் 50 இலட்சம் ரூபா பந்தயம் பிடித்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. இது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும், அவருடன் பந்தயம் கட்டிய மற்றைய தரப்பு தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஒரு கட்சியின் பதவிக்கான அதிகூடிய பந்தயம் எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தயாசிறி ஜயசேகர அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்வுகூறிய நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் ஓய்வறையில் வைத்து மக்களுக்கு இந்த பந்தயம் குறித்து அறிவித்துள்ளார். என்னை கட்சியில் இருந்து நீக்க முன்னர் (செப்டம்பர் 4) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே 50 இலட்சம் பந்தயம் கட்டப்பட்டதாக வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய அரசியல் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

சேனல் 4 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறது – பாதுகாப்பு அமைச்சகம்

Image
சேனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான சேனல் 4 இன் அறிக்கை நிகழ்ச்சியின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த அறிவிப்பின் மூலம் உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை பாதுகாப்பு அமைச்சகம் மதிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சேனல் 4 ஆல் செய்யப்படும் அடிப்படையற்ற, தீங்கிழைக்கும் மற்றும் மோசமான ஆதாரபூர்வமான கூற்றுக்களால் எழும் எந்தவொரு திட்டமிடப்படாத செயல்களுக்கும் அல்லது விளைவுகளுக்கும் சேனல் 4 பொறுப்பேற்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்துகிறது. *👍மற்றவர்களும் பயனடைய அதிகமாக Share  செய்யுங்கள்.* *👉வி

நௌபர் மௌலவி சிரித்துக்கொண்டு இருப்பார்

Image
சிங்கள தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கு தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக நாடாளுமன்றில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்களத் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு முஸ்லிம் பயங்கரவாதிகள் 9 பேரும் கர்ப்பிணித்தாய் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு முட்டாள்களா நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்று தான் என்னால் கேட்க முடியும். இந்த தாக்குதலுக்கு நல்லாட்சி பொறுப்பு கூற வேண்டும் என்ற உறுதியில்தான் அன்றும் இன்றும் இருக்கின்றோம். மேலும் இந்த தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி சிறையில் சிரித்துக்கொண்டு இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/EIWG6Zr via Kalasam