Posts

Showing posts from January, 2025

NPP அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக , நிசாம் காரியப்பரினால் மனு

Image
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. குறித்த மனுவின் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யும் நோக்கத்துடன் கடந்த அரசாங்கம் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில விதிகள், மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதிக்கின்றது என்றும் இது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்...

நான் மஹிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார மறந்துவிட்டார்..!

Image
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால் நான் அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்துவைத்திருக்கவில்லை அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ளார். அனுரகுமாரதிசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போலநடந்துகொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவ...

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்..!

Image
  பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் மருதமுனை - பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று  காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள்    கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும் என  எனவும் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக  அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.இதே போன்று கடந்த வாரமும் பெரிய நீலாவணை  பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கி இருந்தது. இதனையடுத்து ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள்   வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.   மேலும் இம்மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மையில் கடலாமைகள்  டொல்பின்க...

பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது, கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்..!

Image
இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார். குடும்பமாக உழைக்கும் போது குடும்ப முன்னேற்றத்திற்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காக எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், குடும்ப நலமே தங்கள் நலம் என்பதை குழந்தைகள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்றார். அவ்வாறே நாட்டின் நலன் கருதி எடுக்கும் தீர்மானங்கள் சில நேரம் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அதனை பழகிக் கொள்ள வேண்டி வரும், தப்பாக நினைக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். தனது அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/AqYs4Ex via Kalasam

நியூசிலாந்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி..!

Image
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Nelsonயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர். இதன்படி 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 03 விக...

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிவதற்கு அரசாங்கம் தடை..!

Image
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம் 2021ல் நிறைவேற்றப்பட்டது. இது வரும் ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது என அறிவித்திருந்தது. விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது. வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது. தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையிலான புர்கா அணிவதற்கு தடை என்ற உத்தரவு நேற்று அமுலுக்கு வந்தது. from Ceylon Muslim - NEWS CASTING F...