Posts

பெளசி உட்படமூவருக்கு அமைச்சு இல்லை : ஜனாதிபதி

Image
சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். பௌசி, பியசேன கமகே,  மனுச நாணயக்காரஉள்ளிட்ட 3 பேருக்குமே இவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கப்போதவில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக  நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. பௌசிக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை இகு குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2rEOFK0 via Kalasam

நிதி மங்களவுக்கு? ரவிக்கு ஆப்பு? கட்சிக்குள் குழப்பம் தொடர்கிறது

Image
புதிய அமைச்சரவை நியமனம் தாமதமடைந்து வரும் நிலையில் நிதி அமைச்சர் பதவி தொடர்பாக, ஐதேகவின் முக்கிய தலைவர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை அடுத்து, நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரவி கருணாநாயக்க மீண்டும் அந்தப் பதவியைப் பிடிக்க போட்டி போடுகிறார். அதேவேளை, ஏற்கனவே நிதியமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரவும், அந்தப் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார். இதனால் ஐதேகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளை, இவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபரும் இணங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இழுபறிகளால், புதிய அமைச்சர்கள் நியமனம், நாளையோ அல்லது வாரஇறுதியிலோ தான் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் இடைக்கால கணக்கு அறிக்கை புதிய அமைச்சரவை நியமிக்க...

The wire cutter

பிரதமராகுமாறு தனக்கு பத்து தடவைகள் அழைப்பு : சஜித்!

Image
பிரதமராகுமாறு தனக்கு பத்து தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு 14 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். காலி முகத்திடலில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 10 தடவைகளும் பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறியதைப் போன்று சபாநாயகரும் 14 தடவைகள் பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறினார் எனத் தெரிவித்த சஜித், தனக்கு சுய கௌரவம் பெறுமதியானதைப் போன்று தனது தந்தையும் பெறுமதியானவர், தாயும் பெறுமதியானவரென சஜித் தெரிவித்தார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2PIL4nD via Kalasam

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி !

Image
“நாடாளுமன்றத் தேர்தல் வந்தால், மூன்றிலிரண்டுப் பெரும்பான்மையை தாருங்கள். அப்போதே எங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும். தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம். எங்களது சட்டத்தரணிகள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அக்கட்சிக்கு, ஐ.தே.க செயற்குழுவில் அங்கிகாரத்தைப் பெறவுள்ளோம்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், கொழும்பு - காலி முகத்திடலில், இன்று (17) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர், “நெருப்புக்கு மத்தியில் இருப்பது தாச்சி... அப்பம் அல்ல... நெருப்புக்கு முகம் கொடுப்பது தாச்சி தான். எங்களுக்கு பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் தான் எங்கள் பலம். சிறுபான்மை அரசைக் கொண்டிருந்த ஹிட்லர், அன்று உலகப் போர் முடியாவிட்டால் பொதுத் தேர்தல் தான் வேண்டும் என்றிருப்பார் . ஜனநாயகம் இங்கு மிளகாய்த் தூள் ஆனது. நாங்கள் சிக்ஸர் அடித்தோம். உயர் நீதிமன்றமும் சிக்ஸர் அடித்தது....

புதிய பொருளாதாரத்திட்டம் !

Image
எதிர்வரும் வருடத்திற்குள் மக்கள் பொருளாதார திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  மருதானை, சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தங்களுடைய கட்சி வெற்றி பெற்று 2025 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியமைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2EAIvDd via Kalasam

இஸ்லாத்திற்கு எதிராக பேசிய இஸ்ரேல் பிரதமரின் மகனின் முகநூல் முடக்கப்பட்டது!

Image
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். 1. இஸ்ரேல் மண்ணை விட்டு யூதர்கள் அனைவரும் வெளியேறும் வரை.., 2. இஸ்ரேல் மண்ணை விட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறும் வரை.. இந்த நாட்டில் அமைதி இருக்காது. நான் இரண்டாவதை நம்புகிறேன் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் யாய்ர் நேதன்யாகுவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், சர்ச்சைக்குரிய அந்த கருத்து நீக்கப்பட்டு சுமார் 24 மணிநேரத்துக்கு பின்னர் அந்த பக்கம் செயல்பட தொடங்கியது. இதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த யாய்ர் நேதன்யாகு, பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து விட்டது, வாழ்த்துகள்! என குறிப்பிட்டார். ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஈரான் அரசை சேர்ந்தவர்களுக்கு பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ கணக்குகள் உள்ளன. இதுதவிர யூதர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகளும்...