Posts

இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் தடை

Image
இலங்கையில் இன்று காலை முதல் இடம்பெற்றுவரும் அசாதாரண நிலையால் முகநூல் மற்றும் வடஸ்அப் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2XutAQg via Kalasam

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

Image
-ஊடகப்பிரிவு- நாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில்  நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன் ,  அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இன்று  ( 21)  கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது ,  முப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது.இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன. மத உணர்வுகளையும். சிவிலியன்களின் சாதாரண வாழ்க்கையையும் இத்திட்டமிட்ட தாக்குதல்கள்  அச்சுறுத்தியுள்ளன. குறிப்பாக  கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.மதச் சுதந்திரங்களைப் பறித்து , மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணைகாட்டாது தண்டிக்க வேண்டும்.எந்த நோ...

Braking News : தெஹிவளையில் வெடிப்பு சம்பவம்

Image
தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அண்மையில் காணப்படும் தனியார் ஹோட்டல் ஒன்றிலும் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Gyro4M via Kalasam

இவ்வாறு நடக்குமென 4 நாட்களுக்கு முன்பே தெரிவித்தோம் - இந்தியா

Image
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதாக இந்திய ஊடகம் தினத்தந்தி செய்திவெளியிட்டுள்ளது.  அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்ததாக இந்திய ஊடகம் கூறியுள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2UKhS7j via Kalasam

சமயற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே உயிரிழப்பு

Image
இலங்கையின் பிரபல சமயற்கலை நிபுணர்களில் ஒருவரான சாந்தா மாயாதுன்னே இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார் கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் காலை உணவை உண்ணும்போது, அவரும் அவருடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் அறிய முடிகிறது from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2DnCCqU via Kalasam

பாரிய குண்டு வெடிப்பு சம்பவம்- ACJU கண்டிப்பு

Image
இன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது இன்றைய தினம் 21.04.2019 நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. கிறிஸ்தவ சகோதரர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான இன்று அவர்களது மதஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதானது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இந்த தாக்குதல்கள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. இத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும், குறிப்பாக வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்க முன்வருமாறும் அனைவரை...

தேவாலயங்கைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Image
நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானது. இதையடுத்து சுமார் 140க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் நாட்டிலுள்ள பல தேவாலயங்கைச்சுற்றி  பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர். இதேவேளை கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.குறித்த குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கின்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து நடவடிக்ககைகளில் ஈடுப்படுவதையும் முடிந்த வரையில் குறைத்துக் கொண்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழுயையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...