பொதுஜன பெரமுன 3/2 பெரும்பான்மையை பெற்று ஆட்சியை கைபெற்றும்
(அஸ்ரப் ஏ சமத்) இந்தப் பாராளுமன்றத் தோதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். தற்போதைய ஜனாதிபதி 5 வருடம் ஆட்சிப் பொருப்பை எடுத்தாலும் அவருக்கு ஆதரவானதொறு பாராளுமன்றம் இல்லாமல் அவசியமாக உள்ளது. . இந்த நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள 19வது அரசியல் சட்டத்தின் படி ஜனாதிபதிக்கு உரிய சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நிதி , சட்ட திட்டங்கள் பாராளுமன்றம் ஊடகவே அனுமதிக்கப்படல் வேண்டியுள்ளது. ஆகவே தான் அதனை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியிலிருந்தே மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டதொரு பாராளுமன்றம் அமைதல் வேண்டும் . அந்த பாராளுமன்ற உறுப்பிணா்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும் பிரதம மந்திரிக்கும் ஆதரவானவர்களாக இருத்தல் வேண்டும். கடந்த காலங்களைப்போன்று பணத்திற்கும். பதவிக்கும் கட்சி மாறுபவா்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம். பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து சிறந்த பாராளுமன்ற உறுப்பிணா்களை தெரிபு செய்து பாரளுமன்றம் அனுப்புங்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றினாா் தெகிவளை கல்கிசை முன்னாள் மேயா் தனசிரி அமரதுங...