மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது குறித்து தனக்குத் தெரியாது – பசில் ராஜபக்ஷ
இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வாறாயினும் சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது, அவ்வாறானதொரு நிகழ்வு குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கடனுதவி மற்றும் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி நேற்று (29) கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த முடிவு சீனாவின் வர்த்தக அமைச்சகத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bqq4PW via Kalasam