Posts

ஜோன்ஸ்டனிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு...

Image
  பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ 5 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து வெளியேறினார். மேலும் ,மே 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/E1Lbmgf via Kalasam

நிதிமையச்சராக ஜனாதிபதி செயற்படுகின்றார் – காஞ்சன விஜேசேகர

Image
புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/v7qzd2m via Kalasam

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு!

Image
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.   அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும், பஸ்கள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BnQD1VE via Kalasam

சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய மக்கள் காங்கிரஸின் 03 எம்பிகள்.- குற்றப்பத்திரிகை வழங்கி வைப்பு!

Image
   31ஆம் திகதி அடுத்த விசாரணை!  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், 03 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குற்றப்பத்திரிகை, அவர்களின் சட்டத்தரணிகள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு கட்சியினால் வழங்கி வைக்கப்ப்ட்டது.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசராணை இன்று (23) மாலை கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில்  நடைபெற்றது.  “ கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக  இயங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான  இஷாக் ரஹ்மான், முஷரப் முதுநபின் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கு எதிராக கட்சியின் ஒழுக்காற்று விசாரணை குழுவினால் விசாரிக்கப்படுவதற்காக பலமுறை அழைக்கப்பட்டதற்கிணங்கவும் இன்று வழங்கப்பட்ட திகதிக்கமையவும்,  முன்னறிவித்தல் இன்றி 03 சட்டத்தரணிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆஜராகினர்.   அதனைத்தொடர்ந்து கட்சியின் உயர்பீட அனுதிக்கிணங்க விசாரணைகளுக்காக 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தரணிகளுடன் ஆஜராகி இருந்தனர் .  இதன் போது, கட்சியினால் குற்றப்பத்திரிகை வ...

அமைச்சர் ஹரீன் பெனாண்டோ விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு...

Image
  அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாடு மீண்டும் ஸ்திரமான நிலைக்கு அடைந்து ஜனநாயகத்திற்கு மதிக்கும் நாடாக மாற வேண்டியது கட்டாயமாகும் என தெரிவத்துள்ளார். அமைச்சரவையில் சமர்பித்து அதற்கான அங்கீகாரம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாராளுமன்றத்திலேயே உள்ளன. மேலும் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பர்கள் என நாம் நம்புகின்றோம் என ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/kqSXsVN via Kalasam

‘மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்’ அதிரடி எச்சரிக்கை.

Image
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/wm2ECSt via Kalasam

“அந்நியச் செலாவணியை உள்ளீர்க்கும் பொறுப்புக்கள் எல்லோருக்கும் உடையது” - அசாத் சாலி!

Image
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அந்நியச் செலாவணி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரி செய்வதற்கு, நாட்டிற்குள் அதிகளவு டொலர் வர வேண்டும். புலம்பெயர் இலங்கையர்கள், வௌிநாடுகளில் இதைச் சேகரித்து இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்குவது அவசியம். இவ்விடயத்தில், குறுகிய மனநிலையில் செயற்படக் கூடாது. சகல கட்சிகளின் தலைவர்களும் ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதால், பொருளாதார மேம்பாடுகளை அடைந்துகொள்ளும் வழிகள் விரைவில் திறக்கப்படலாம். எனவே, இளைஞர்கள் இவ்விடயம் பற்றி சிரத்தை கொள்வதுதான் இன்றைய அவசரத் தேவை. உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான அமைதியை நாட்டில் கொண்டுவரும் பொறுப்பையும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவு உள்ளீர்க்கும் சூழலையும் இளைஞர்களே ஏற்படுத்த வேண்டு...