Posts
Showing posts from November, 2018
UNF தலைவர்கள் ஞாயிறு ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கின்றோம் - ரிசாத்
- Get link
- Other Apps
ஐக்கிய தேசிய முன்னனின் கட்சி தலைவர்கள் மீண்டும் எதிர்வரும் ஞாயிறு ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாத் பதியுதீன் சற்றுமுன் தெரிவித்தார். இன்று (சற்றுமுன்) ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்குமான சந்திப்பு இடம்பெற்றது. அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், மிக நீண்ட நேரம் பேசினோம். எவ்வாறு இணைந்து செயலாற்றுதல் தொடர்பாகவும் பேசினோம். எனவும் அவர் தெரிவித்தார். தொடர்புடைய செய்தி.. இன்றைய ,TNA ஜனாதிபதி சந்திப்பு from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2zvyfrx via Kalasam
கனுகெட்டிய நகரில் முஸ்லிம் நபரின் கடைக்கு தீ
- Get link
- Other Apps
புத்தளம்- குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள கனுகெட்டிய நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாகியுள்ளது. கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீயில் எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பாணந்துறை நகரில் இவ்வாறு முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்தமையும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2DS1asZ via Kalasam
குருநாகலில், மேகம் படர்ந்த அதிசய காட்சி
- Get link
- Other Apps
குருநாகல் – முத்தேட்டுகல பிரதேசத்தில் உள்ள வயலில் மேகத்தைப் போன்ற பொருள் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று அதிகாலை அப்பகுதி பரந்த நலையில் காணப்பட்ட குறித்த பொருள் சூரிய ஒளி வெளிவர ஆரம்பித்தும் கரைந்து சென்றதாக அப்பிரதேச மக்கள் கூறினர். அதனை கையில் எடுக்கும்போது கரைந்து செல்லும் இயல்பை பார்க்க முடிந்ததாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.அனர்த்த முகமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களஅதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டுள்ளனர். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2E6WtMT via Kalasam
05ஆம் திகதி மீண்டும் தோற்கடித்துக் காடுங்கள் - TNA சந்திப்பில் மைத்திரி
- Get link
- Other Apps
எதிர்வரும் 05ஆம் திகதி நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் பிரதமர் மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை முன்வைத்து நிறைவேற்றுக்காட்டுங்கள் ஏற்றுக்கொள்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு ஜனாதிபதிக்கு மாளிகைக்கு முன்னாள் இருந்து from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2DTKem4 via Kalasam
முஹம்மத் பின் சல்மானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு
- Get link
- Other Apps
சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். உலக பொருளாதார பலமிக்க நாடுகள் என அடையாளப்படுத்தப்படும் ஜீ-20 மாநாடு ஆஜன்டீனாவின் புவர்நோஸ் நகரில் நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2SiAy8v via Kalasam
சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா!
- Get link
- Other Apps
-யூ. கே. காலித்தீன்- வருடாந்த பரிசளிப்பு விழாசாய்ந்தமருது ரியாலுல்ஜன்னா வித்தியாலத்தின்கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (28) பாடசாலை அதிபர்எம்.ஐ.சம்சுதீன் தலைமையில்நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கு கல்முனைவலயக் கல்விப் பணிப்பாளர்எம்.எஸ். ஜலீல் பிரதமஅதிதியாக கலந்துகொண்டதோடு,பிரதிக் கல்விப் பணிப்பாளர்ஏ.எல்.எம். முக்தார் கௌரவஅதிதியாகவும் விஷேடஅதிதிகளாக சாய்ந்தமருதுகோட்டக் கல்விப் பணிப்பாளர்ஏ.பி பாத்திமா நஸ்மியா,இலங்கை மின்சார சபையின்கல்முனை மின் அத்தியட்சகர்எஸ்.எம்.ஏ.அக்பர் அலி, விஷேட தேவையுடைய ஆசிரிய மாணவர்களுக்கான வலவாளர் திருமதி ஸியோனி ஆகியோருடன் பாடசாலைபிரதி அதிபர், ஆசிரியர்கள்மற்றும் கல்வி அதிகாரிகள்பெற்றோர் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர். விழா முடிவில் 2018 ஆண்டு இணைப்பாடவிதான போட்டிகளான தமிழ் மொழிதினப் போட்டியில் பாவோதல், பேச்சுப் போட்டி, இசையும் அசைவும் போட்டிகளிலும், ஆங்கில மொழிதினப் போட்டியான கொப்பி றைட்டிங், கலாசாரப் போட்டி, அழகியல் போட்டி, கட்டுரை ஆகிய போட்டிகளில் வலய மற்றும் கோட்ட மட்டத்தில் பங்கபற்றி வெற்றிகைளைஈட்டி பாடசாலைக்கும் கோட்டத்திற்கும் பெருமையைச் சேர்த்த மாணவ
நாமல் நீதிமன்றில் ஆஜரானார் - விசாரணை ஒத்திவைப்பு
- Get link
- Other Apps
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவும் கவர்ஸ் கோப்பரேட் சர்வீஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார். முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியாளர்கள், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களை அனைவரும் அடுத்த வழக்குத் தவணையின் போது ஆஜராகுமாறும், நீதிபதி கட்டளையிட்டார். இதேவேளை, பிரதிவாதிகளான நாமல் ராஜபக்ஷ எம்.பி உள்ளிட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2DPuqAu via Kalasam
மகிந்தவுக்கு எதிரான விசாரணை இன்று, நடந்தது என்ன?
- Get link
- Other Apps
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சரேசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததாக தெரியவந்தன. இதன் பின், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது
- Get link
- Other Apps
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2P7u1eU via Kalasam
கருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு? - சூடு பிடித்த பாராளுமன்றம்
- Get link
- Other Apps
மட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்பதாக, நளின் பண்டார மற்றும் சுமந்திரன் எம்.பி.கள் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான ஒழுங்குப் பத்திரங்களை முன்வைத்து, பாட்டலி, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர். இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த நளின் பண்டார எம்.பி. மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது பாரதூரமான ஒன்றாகும். அண்மையில் கருணா அம்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், 'சில ஐக்கிய தேசியக் க
இலங்கையில் தடுமாறும் அரசியல் : முஸ்லிம் பள்ளிவாயல்களில் விசேட துஆ
- Get link
- Other Apps
இலங்கையில் கடந்த 20 நாட்களாக நடைபெற்றுவரும் அசாதரண அரசியல் சுழலல் காரணமாக, முழு இலங்கையும் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கமைய இலங்கையின் அநேக முஸ்லிம் பள்ளிவாயல்களில் இன்றைய ஜும்மாவின் போது குணூத் எனும் விசேட துஆ பிராத்தனை செய்யப்பட்டது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2PaILcV via Kalasam
இன்றும் இலங்கையில் மற்றம் நிகழலாம் - பிரதமரொருவர் நியமிக்கப்படும் சாத்தியம்?
- Get link
- Other Apps
இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோரின் பெயர்களே, புதிய பிரதமருக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. Tamil C News from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2ACib7l via Kalasam
இன்றும் தோல்வி கண்ட மகிந்த தரப்பு
- Get link
- Other Apps
இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வில் மகிந்த பிரதமர் தலைமையிலான அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதில் சற்றுமுன் 122 பெருமான்மை வாக்குகளால் நிறைவேவேற்றப்பட்டுள்ளடு. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2Q27hCv via Kalasam
மட்டக்களப்பில் வீதியில் நின்ற பொலிஸார் சுட்டுக்கொலை - படங்கள்
- Get link
- Other Apps
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (30)அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறித்த பொலிஸ் சோதனை சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ரீ56ரக துப்பாக்கிகளினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இரு கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு சென்றுள்ள கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிசூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அம்பாறை பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த கணேஸ் டினேஸ்(வயது-28) பிரசன்ன(முழு விபரமும் கிடைக்கவில்லை) ஆகிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே உயிரிழந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட
லிட்ரோ கேஸ் தம்பர அமில தேரருக்கு மாதாந்தம 125,000 ரூபா கொடுத்துள்ளது
- Get link
- Other Apps
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நிதி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய முதித தமானகம சாட்சி வழங்கியிருந்தார். இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னின்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எழுப்பிய குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போது சாட்சிக்காரரான முதித தமானகம, 2015 ஆண்டின் பின்னர் வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரருக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம 125,000 ரூபா வழங்க நிறுவனத்தின் நிர்வாகிகள் யோசனை ஒன்றை முன்வைத்தாக தெரிவித்துள்ளார். இதற்கு தான் மறுப்பு தெரிவித்தாகவும், பின்னர் மாதாந்தம் 95,000 ரூபா பணம் லிட்ரோ கேஸ் நி
அமைச்ரவை நிதி செலவுக்கு எதிரான பிரேரணை இன்று
- Get link
- Other Apps
அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2RoFyZh via Kalasam
21 நாளில்; 840 மில்லியனை வானூர்திக்கு செலவு செய்த மகிந்த!
- Get link
- Other Apps
கடந்த 21 நாட்களில் மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது பிரத்யேக உலங்கு வானூர்தி பயணங்களுக்காக 840 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க. நாடாளுமன்றுக்கும் மஹிந்த ராஜபக்ச ஹெலிகப்டரிலேயே வந்து சென்ற நிலையில் சட்டவிரோத அரசிலேயே உல்லாசம் அனுபவிப்பதாக மஹிந்த தரப்பு மீது பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, இன்றைய தினம் மஹிந்தவின் செயலாளர் பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிராக 123 பேரின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2FKKNkB via Kalasam
தீர்வுக்கு தயார்; கருவிடம் மைத்திரி - UNFயுடன் நாளை சந்திப்பு
- Get link
- Other Apps
நாளை (30) எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2rbDFDJ via Kalasam
சகல மதகுருமார்களும் இன ஒற்றுமைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் - கல்முனை விகாராதிபதி
- Get link
- Other Apps
(எம்.பஹ்த் ஜுனைட்) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினுடான சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரர் தனது உரையின் போது பின்வருமாறு குறிப்பிட்டார். அண்மையில் நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்கள் மதத் தலைவர் என்ற வகையில் நான் மிகவும் கவலை அடைகிறேன். இவ்வாறான கசப்பான அனுபவங்களை மறந்து நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சந்தர்பமாகவே இச் சந்திப்பை கருதுகிறேன். சுமார் 12 வருடங்களாக கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மத குரு என்ற வகையில் அதிகமான ஏனைய மதத்தை சேர்ந்த மதத் தலைவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். நான் சிங்கள பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த மகத்தான நிகழ்வை நினைவு படுத்துவேன். ஒரு நாளும் நான் ஒரு சிங்களவர் என நினைப்பதில்லை நான் இலங்கையர் என்றே நினைக்கிறேன் நாம் எல்லோரும் இலங்கை தாயின் மக்கள் ஒற்றுமையாகவும், சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். ஒரு சிலர் தங்களது சுய நலத்திற்காக சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என மக்களை பிரித்து இலாபம் பெற முயற்ச
அதாவுல்லாஹ்வின் மகனே! அக்கரைப்பற்று கம்பரலிய திட்டத்தை தடுத்தார் - தவம்
- Get link
- Other Apps
அதாவுல்லாவின் மகனால் இந்த வருடம் மட்டும் 150 மில்லியன் (15 கோடி) அக்கரைப்பற்று அபிவிருத்தி தடுக்கப்பட்டுள்ளது. என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாம் கொண்டு வந்த வேலைகளை செய்ய விடாமல் அதாவுல்லாவின் மகன் தடுத்துள்ளார். அவர் அதாவுல்லாவின் மகனே தவிர அக்கரைப்பற்று மேயர் அல்ல. அக்கரைப்பற்றினை அதாவுல்லாவும் அவருடைய மகனும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டுடிருக்கும் slow poison ஆக மாறி இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் கம்பெரலிய வேலைத்திட்டம் நடக்கின்ற போதும், அக்கரைப்பற்றில் மற்றவர்கள் வேலை செய்தால் தனதும் தனது தந்தையினதும் எதிர்காலம் அழிந்து போகும் என்பதால் தடுத்துள்ளார்கள். அவர்களால் 5 சதம் கூட கொண்டுவர முடியாது. கொண்டு வருபவர்களையும் செய்ய விடுவதில்லை. அந்த வகையில் வைக்கோல் பட்டறையில் கட்டிய நாலுகால் விலங்காக அவர்கள் செயற்படுகிறார்கள். இது மட்டுமல்ல எமது நகர திட்டமிடல் அமைச்சின் கீழ் கிடைத்த 75 மில்லியன் பெறுமதியான வீதி அபிவிருத்தி மற்றும் சந்தை நிர்மானத்திற்கான 50 மில்லிய
பேருவளை தாரிக் மரணம் : கைது செய்யப்பட்ட மாணவன் மாகொல இல்லத்தில்...
- Get link
- Other Apps
பேருவளை அல்–ஹுமைஸரா தேசிய பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலின் போது மாணவன் ஒருவர் மரணமான சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட மாணவன் களுத்துறை மேலதிக நீதிவான் திருமதி என்.நாணயக்கார முன்னிலையில் ஆஜர்செய்த போது டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மாக்கொல சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த மாணவர் ஏற்கனவே களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்ததோடு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தில் காயமுற்ற மாணவர் மரணமானதையடுத்து மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2KJm3ry via Kalasam
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறைத்தண்டனை ரத்து...!
- Get link
- Other Apps
பயங்கரவாத வழக்கில் தொடர்புபடுத்தி மாலைதீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைத் தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. மாலைதீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத், பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்தது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். சிறைவாசத்தின்போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில்
”கலாநிதி அஸீஸ் நினைவு தின பேச்சு”
- Get link
- Other Apps
(அஷ்ரப் ஏ சமத்) கலாநிதி ஏ.எம். ஏ அசீஸ் மன்றத்தினால் அஸீஸ் நினைவு தின பேச்சு நேற்றுமுன் தினம் (27) கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் நடைபெற்றது. இந் நிகழ்வு அசீஸ் மன்றத்தின் தலைவா் காலித் எம் பாருக் மற்றும் வை.எம்.எம். ஏ யின் தலைவா் எம்.என்.எம் நபீல் அகியோா்கள் தலைமையில் நடைபெற்றது. செனட்டா் கலாநிதி அசீஸ் பற்றிய நினைவுரையை சிவில் சேவை அதிகாரியும் , பிரதம மந்திரி மற்றும் பல்வேறு அமைச்சுக்களின் முன்னாள் செயலளராக கடமையாற்றிய தேசமான்ய எம்.டி.டி. பீறிஸ் ஆற்றினாா். இவ் வைபத்தின் போது அசிஸீன் மகன் அலி அஸீஸ் அவா்கள் அசீஸ் பற்றிய ஆங்கில நுாலைதேசமான்ய பிறீஸ்க்கு வழங்கி வைத்தாா். இங்கு உரையாற்றிய தேசமான்ய பீறிஸ் - இலங்கையின் 44 வது செனட்டராகவும் சிவில் சேவை அதிகாரியும், கொழும்பு சாஹிரா கல்லுாாி வை.எம்.எம். ஏ பேரவையை ஸ்தாபித்தவா் கலாநிதி அஸீஸின் அவா்கள் அவரது 45வது நினைவு தினத்தின்போது அவா் பற்றிய உரையை ஆற்றுவதில் பெரும் பாக்கியமாகும். அவா் பற்றியதும அவரது செயற்பாடு சேவைகளையும் எதிா்கால சமுகம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அவா் இந்த நாட்டுக்கும் அவா் சாா்ந்த சமுகத்திற்கும் மேலும் சே
மைத்திரிக்கு சம்மந்தன் அவசரக்கடிதம்!
- Get link
- Other Apps
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பவர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒருவராக இருக்கின்றார். அத்துடன் இவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ, சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றனவா என்ற முரண்பாட்டினை தோற்றுவித்துள்ளது. இதனை மேலும் எம்மால் சகித்துக்கொள்ள முடியாது. ஆகவே 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐ.தே.முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைக்க ஆதரவளிப்போம் என்றும், ஐக்கிய தேசிய முன்னணியால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட
மைத்திரியை மாலை கரு சந்திக்கின்றார் !
- Get link
- Other Apps
பிந்திய செய்தி: இப்போது,கரு ஜெயசூரியா ஜனாதிபதி செயலகம் சென்றடைந்தார். அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுதலின் பேரில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை சந்திக்கவுள்ளார். இன்றைய பாராளமன்ற அமர்வில் ஆளுந்தரப்பினர் கலந்து கொள்ளாத நிலையில் விஜேதாஸ ராஜபக்ஷ மட்டும் கலந்து கொண்டு வெற்று கதிரைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, "அரசியல் நெருக்கடியால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆகவே பாராளுமன்ற வேலைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு ஜனாதிபதியுடன் பேசி ஓரிரு நாட்களில் இன்று நாடு எதிர் நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரு முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார். மேலும் கலந்துரையாடி பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்வதில் ஜனாதிபதி விருப்புடன் இருக்கிறார் என்பதை நான் அறிவேன் எனவும் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், “விஜேதாஸ அவர்களே உங்களின் ஆலோசனையை நான் ஏற்கிறேன். ஜனாதிபதியுடன் நான் பேச தயாராகவே உள்ளேன். எனக்கு அவருடன் தனிப்பட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இதை நா
மைத்திரி, ரணிலை பாராளுமன்றில் திட்டித்தீர்த்த - அநுர குமார
- Get link
- Other Apps
“நாட்டின் ஜனாதிபதி நீதிக்கு முரணாக செயற்படுவாராயின் நாட்டுப் பிரஜைகள் எந்த சட்ட திட்டங்களுக்கு அடிபணிவார்கள்? ஏன் அடிபணிய வேண்டும்” என சபையில் கேள்வி எழுப்பினார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க. இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டு தனக்கான நேரத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அனுர குமார திஸாநாயக்க, “நாம் விரும்பும், விரும்பாத விடயங்கள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அல்ல விடயம் நாம் அனைவரும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவர்கள். சாதாரண தனி நபரிலிருந்து நாட்டின் ஜனாதிபதி வரையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு அடிபணிந்து செயற்பட வேண்டிய கடமையுள்ளது.ஆகவே ஜனாதிபதி நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடிய அரசியலமைப்பிற்குட்பட்டே செயற்பட வேண்டுமே தவிர தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல. தனி நபர் உள்ளிட்ட அனைவரினதும் அதிகார வரம்புகள் வகுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை மீறி தான்தோன்றித்தனமாக செயற்பட்ட, செயற்படும் ஜனாதிபதியுடனான எந்த வித பேச்சு வார்த்தையும் இனி பல
வஸீம் தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவு
- Get link
- Other Apps
சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்கு UNPயில் மாற்றம் தேவை - ஹகீம் (வீடியோ)
- Get link
- Other Apps
சிலோன் முஸ்லிம் அலுவக செய்தியாளர்- சிறுபான்மை கட்சிகள் கூட்டமைப்பாக இயங்க வேண்டும் என்றால் சிறுபான்மை சமூகத்தின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்நாடின் பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் மாற்றங்களோடு நிகழ வேண்டும் என்பதுடன் எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று (28) அலரி மாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்; அடுத்த தேர்தலில் எமது இந்த ஐக்கிய தேசிய கட்சி அணியாக புதிய மாற்றத்துடன், புதிய திடகாத்திரமான தலைமைகளுடன் பயனிக்க வேண்டும். மக்கள் விரும்பு ம் கட்சியாக மாற்றம் வேண்டும் இல்லையேல் எங்களால் தேர்தலில் முகம் கொக்க முடியாது நிலை உள்ளது. இதனை இக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். வீடியோ இணைப்பு: from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2TPgNah via Kalasam
Sri Lanka Parliament curtails expenditure for Prime Minister's office
- Get link
- Other Apps
Nov 29, Colombo: Sri Lanka Parliament today voted in favor for a motion to curtail the budgetary allocations for the Prime Minister's office. The motion to suspend expenditures of Prime Minister's office, passed with 123 MPs voting in favor and 0 against. All parliamentarians of United National Front, Tamil National Alliance and Janatha Vimukthi Peramuna voted in favor of the motion demonstrating majority in the House. Once again the parliamentarians of the minority government boycotted the parliament session except for MP Wijeyadasa Rajapakshe who delivered a special statement to the House. The motion, signed by UNP MPs Navin Dissanayake, Ravi Karunanayake, Nalaka Prasad Colonne, Dr. Kavinda Heshan Jayawardana, Hector Appuhamy, and Chathura Sandeepa Senaratne, challenges the use of public funds by Prime Minister's office. The motion included in the Order Paper for today's session noted that the House on 16th November, 2018, accepted the official statement mad
ஜனாதிபதி பழைய அமைச்சரவையை இனியாவது உருவாக்குவாரா? ரிசாத்
- Get link
- Other Apps
இனியாவது, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி எப்படியான அமைச்சரவை இருந்ததோ அதுபோல் மீண்டும் பழைய நிலைக்கு ஜனாதிபதி மாற்றியமைப்பார் என நம்புவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு இன்று (29) நடைபெற்ற போது, பிரதமர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி கையாள்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 123 வாக்குகளால் வெற்றிகண்டது இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி பதவி ஏற்கும்போது எடுத்த வாக்குறுதிக்கு அமையவும்,அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவார் எனவும் நம்புவதாக மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2E4e9sv via Kalasam
123 வாக்குகளால் இன்றும் தோல்வியடைந்த மகிந்த!
- Get link
- Other Apps
நாடாளுமன்றம் மீண்டும் இன்று காலை 10 மணி அளவில் கூடியது. இன்றைய அமர்வில் பிரதமர் அலுவலகத்தின் நிதி முடக்கம் தொடர்பான யோசனைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் போது 123 வாக்குகளால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மேலும், இன்றைய அமர்வில் ஆளும்தரப்பிலிருந்து விஜேயதாச மாத்திரம் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2rag1r1 via Kalasam
வெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு
- Get link
- Other Apps
மனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து "இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண்ணீரையும் சொந்த வீடு" எனும் கனவுக்காக அன்புப் பிள்ளைகளைத் துறந்து ஓமான் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்ற முள்ளிப்பொத்தானை இல.380/C, யுனிட் - 07 முகவரியினை உடைய அஸ்மியா நோய்வாய்ப்பட்டு நாடு திரும்ப இயலாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். எமது அரசியல் தலைமைகள் அஸ்மியாவை நாட்டுக்கு மீட்டெடுக்க முன்வர வேண்டும். மூதூர் ரிசான நபீக் போல் மீண்டும் ஓர் இளம்பெண்ணை எமது மாவட்டம் இழந்துவிடக்கூடாது. சகோதரி அஸ்மியா விடயம் தொடர்பாக சில பிரமுகர்களுடன் பேசியிருக்கின்றேன். நம்பிக்கைமிக்க பதில் தந்திருக்கின்றார்கள். சகோதரி அஸ்மியாவை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளதயாராக இருக்கின்றோம். ஆகவே இது தொடர்பில் முஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் ஆகியோரிடம் எமது ஊடக நிறுவனங்கள் ஊடாக இப்பெண்ணுக்கு உதவ முன்வருமாறு கோருகின்றோம். சகோதரியா அஸ்மியா அவர்களை எமது பிரார்த்தனைகளில் இணைத்துக்கொள்வ
“பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது” மகிந்த
- Get link
- Other Apps
“பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணித்து விட்டு பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலேயே தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்ற இன்றைய அமர்வையும் புறக்கணித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, “பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது அப்படி நிறுத்துவதாயின் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் சபாநாயகரின் செயற்பாடு சட்ட விரோதமானது” எனவும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2Rnzq3d via Kalasam
வடக்கு, கிழக்கில் 55 ஆயிரம் வீடுகள் - மகிந்த தரப்பு
- Get link
- Other Apps
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சோடு இணைந்து, வடக்குக்கும் கிழக்குக்குமான 55,000 வீடுகளை விரைவாக நிர்மாணிப்பதற்கு, ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினூடாக மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று முன்தினம் (27) தாக்கல் செய்திருப்பதாக, அவ்வமைச்சுக்கான அமைச்சர் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கூறும் வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்னமும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், இடைக்காலக் கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவே, மஹிந்த தரப்பு எதிர்பார்க்கிறது. எனினும், நாடாளுமன்றத்தில் அவ்வணிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற கேள்வியெழுந்துள்ளது. எனினும், இடைக்காலக் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியுமென நம்புவதாக அவர் தெரிவித்தார். &q