மாணவர்களை விடுவிக்க ஆவனசெய்யுமாறு கிழக்கு ஆளுநரிடம் பெற்றோர் வேண்டுகோள்!
தொல்பொருள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது பிள்ளைகளை விடுவிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர் . நேற்றுமுன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை அவரது ஆளுநர் செயலகத்தில் அவர்கள் சந்தித்தனர். எதிர்வரும் 05 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு ஆளுநர் சட்டரீதியான முன்னெடுப்புக்களைக் கேட்டறிந்ததோடு, இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணியை தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்து கொண்டார். இது தொடர்பாக பொலிஸார் புராதன தொல்பொருள் திணைக்களத்திலிருந்து விரிவான அறிக்கையினை கோரியுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அதனை ஆராய்ந்து தீர்ப்பினை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி ஆளுநரிடம் தெரிவித்தார். மேலும் புராதன...