8 பிரபல பாதாளக்குழு உறுப்பினர்கள் சற்றுமுன் கொழும்பில் கைது!
திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல பாதாளக்குழு உறுப்பினரான தெமட்டகொட ருவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 8 பேரில் பாகிஸ்தான் தம்பதியினரும் அடங்குகின்றனர். சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், பணம் எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் 2 கருவிகள், 4 கிராம் ஹெரோயின் மற்றும் 3 சொகுசு வாகனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தெமட்டகொட பகுதியிலுள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தெமட்டகொட ருவன் என்பவர் பிரபல பாதாளக்குழுத் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2VkGYFA
via Kalasam
Comments
Post a Comment