”பாதாள குழுவுடன் முஜீபுருக்கு தொடர்பு ” எழுதியவரை கைது செய்ய முஜீபுர் நடவடிக்கை

பாதாள உல­கத்­த­லைவர் மாகந்­துர மதூஷ் மற்றும் கஞ்­சி­பான இம்ரான் போன்­றோ­ரு­டன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்டு முகப்­புத்­த­கத்தில் பதி­வேற்­றிய நபரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்தி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவில் முறைப்­பா­டொன்றை கைய­ளித்­துள்ளார்.

இதே­வேளை, குறித்த பதிவின் மூலம் தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் துரி­த­மாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு ­மெனக் கோரி சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் கடி­த­மொன்­றையும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சமர்ப்­பித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போது இது விட­ய­மாகக் கருத்து தெரி­வித்த அவர்,

பாதாள உல­கத்­த­லைவர் மாகந்­துர மதூஷ் கைதின் பின்னர் அதனை பின்­ன­ணி­யாகக் கொண்டு பல்­வே­றுப்­பட்ட கருத்­துக்கள் வெளி­யாகி வரு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் கடந்த காலங்­களில் பாதாள உலகத் தலை­வர்­க­ளான மாகந்­துர மதூஷ் மற்றும் இம்ரான் போன்­றோ­ருடன் எனக்குத் தொடர்­புள்­ள­தா­கவும் இம்ரான் என்­பவர் எனது கட்­டி­டத்தில் வாட­கைக்கு இருந்­த­தா­கவும் குறிப்­பிட்டு சமூக வலைத்­த­ளங்­களில் பதி­­வொன்று வைர­லாகப் பர­வி­யி­ருந்­தது.

மஹிந்த ராஜபக்ஷவின் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கடந்த காலங்­களில் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்டு இருந்­த­மையை கார­ண­மா­கக்­கொண்டு, மதூஷின் கைதை பின்­ன­ணி­யாக வைத்து எனக்குப் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே இவ்­வா­றான பதி­வுகள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. இத­னூ­டாக எதிர்­கா­லத்தில் எனக்கு உயிர் அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களும் அதிகம் காணப்­ப­டு­கின்­றன. அதன் கார­ண­மாக குறித்த முகப்­புத்­தக பதி­வுக்­க­மைய குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அந்தக் கட்­டி­டத்தின் உரி­மை­யா­ளரும் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வி­ட­யம் குறித்து கடந்த வாரம் கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விடம் முறைப்­பா­டொன்­றி­னையும் முன்­வைத்­தி­ருந்தேன். இருப்­பினும் அவ­ம­திப்பு முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­கான அதி­காரம் எமக்கு கிடை­யாது என்று பொலிசார் குறிப்­பிட்­டனர்.

இது­போன்ற முகப்­புத்­தக பதிவு எனது அர­சியல் வாழ்க்­கைக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது என்­பதை பொலி­சா­ருக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளேன். அது­மாத்­தி­ர­மின்றி இந்த முகப்­புத்­தக பதிவு என்­மீ­தான உயிர் அச்­சு­றுத்­த­லா­கவே சோடிக்­கப்­பட்­ட­தாகக் கரு­து­கிறேன்.

இந்த விட­யங்கள் குறித்து குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு விளக்­க­ம­ளித்­துள்ளேன். எனவே இது­கு­றித்து பொலிசார் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வார்கள் என்று எதிர்­பார்ப்­ப­தா­கவும் இந்த விடயம் குறித்து விசா­ர­ணைகள் செய்து குற்­ற­வா­ளி­களை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு கடி­தத்­தி­னூ­டாக அறி­வித்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் இது விட­ய­மாக உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி சபா­நா­ய­க­ரிடம் எழுத்­து­மூலம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது பாதாள குழு­வி­னரை பயன்­ப­டுத்தி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ அச்சுறுத்தினார். அத்தோடு தேர்தல் பிரசாரங்கள் நடத்தமுடியாதபடி தடுத்தார். எனக்கு ஆதரவாக இருந்தவர்களின் வீடுகளுக்கு பாதாள உலக குழுவினரை அனுப்பி அச்சுறுத்தல் விடுத்தார். இப்போது எமக்கு பாதாள குழுவினருடன் தொடர்பிருப்பதாக சுய அரசியல் இலாபத்திற்காக இட்டுக்கட்டுகின்றனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.


from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2tJSXkf
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!