கிழக்கில் புடவை நிலையத்தை ஹிஸ்புல்லாஹ்விடம் கையளித்த ரிசாத்
ஊடகப்பிரிவு
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (29) காலை மட்டக்களப்பு, பாலமுனையில் நடைபெற்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த நிலையத்தை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைச்சரின் மேலதிக செயலாளர் தாஜுதீன், கிழக்கு மாகாண மேலதிக செயலாளர் அஸீஸ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைதீன், புடவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ரொபட் பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2YrLowK
via Kalasam
Comments
Post a Comment