குப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்..
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனுதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து வன்னாத்தவில்லு பிரதேச சபையில் ஆட்சி அமைத்துள்ளது.
பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட வன்னாத்தவில்லு பிரதேச சபையில், நேற்றைய சபை அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.
இதன்போது, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் குப்பைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியது என ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனை அடுத்து, குப்பைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் திறந்த வாக்களிப்பு இடம்பெற்றது.
இந்த வாக்களிப்பில் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 6 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நால்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு 1 உறுப்பினர்கள் தலா ஒவ்வொரும் என 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த வாக்களிப்பில் நான்கு உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2Upft13
via Kalasam
Comments
Post a Comment