நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்- ஜனாதிபதி
பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமாணி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும்தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேவேளை நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அதுதொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2Dn5T4H
via Kalasam
Comments
Post a Comment