அதிர்வில் கண்ணீர் விட்டழுதார் அமைச்சர் ரிஷாத்..!!
நாட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலையில் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களை அடிமைத்தனமாகப் பார்க்கும் பெரும்பன்மை இனத்தவர்கள் சிலரின் இன்றய நிலைப்பாட்டினைப் பார்க்கின்றபோது மிக வேதனையாக இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று தொலைக் காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார்.
வசந்தம் தொலைக் காட்சியின் அதிர்வு என்னும் அரசியல்வாதிகளின் வாராந்த கருத்துப் பரிமாறல் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சி அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
முஸ்லீம்கள் இன்று நின்மதியிழந்து காணப்படுகின்றனர். சம்மந்தமில்லாமல் பலர் கைது செய்யப்படுகின்றனர்.யார் யாரிடம் உதவி தேடுவது என்று தெரியாமல் அப்பாவி முஸ்லீம் மக்கள் அல்லல் பட்டுக்கொண்டு அச்சத்தில் இருக்கின்றனர்.
அநியாயமாக காடையர்களினால் புனித ரமழான் மாதத்தில் நின்மதியாக நல்ல அமல்கள் செய்ய முடியாதளவு பள்ளிகளை உடைக்கிறார்கள். மக்களை அச்சமூட்டுகிறார்கள், கொலை செய்திருக்கிறார்கள், வாகனங்களுக்கு தீமூட்டுகிறார்கள், தீமூட்டியிருக்கிறார்கள், பல கோடி பணம் சொத்துக்கள் என சூறையாடிச் என்றுள்ளனர். இன்னும் இன்னும் அநியாயம் நடந்து கொண்டிருக்க எம்மீது இனவாதிகள் விரல்நீட்டுகிறார்கள்.
என்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டே தனது கருத்துக்களை வழங்கினார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள்.
from Ceylon Muslim - http://bit.ly/2YFSMny
via Kalasam
Comments
Post a Comment