Posts

Showing posts from June, 2019

அன்மைய முஸ்லிம்களுக்கு ஏதிரான தாக்குதல். நஷ்ட ஈடு தயார் - அரசு

Image
உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மினுவாங்கொட, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.  முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வரையில் பெரும்பாலான வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்காக முற்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்..  முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் அரசாங்க அலுவலகத்தின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழங்கப்படும் இழப்பீடுகள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிய முடியும்.  0112-57-58-03, 0112-57-58-13, 0112-57-58-26 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபாலவிடம் விபரங்களைக் கேட்டறிய முடியும் என்றும் தெரிவித்தார்.  (அரசாங்க தகவல் திணைக்களம்) from Ceylon Muslim - https://ift.tt/2FGcM2s via Kalasam

சாட்சியம் வழங்கிய ரிஷாத் - நடந்தது என்ன ? முழு விபரம் இதோ

Image
கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். நானோ எனது குடும்பத்தினரோ பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை. நான் ஸஹ்ரானை பார்த்தது கூட இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், தெரிவுக்குழு :- இந்த குழு நியமிக்கப்பட்ட பின்னர் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள்குழு சரியான காரணிகளை அறிக்கையிடவே உங்களிடமும் விசாரணை இடம்பெறுகின்றது. நீங்கள் சில காரணிகளை எம்மிடம் தெரிவித்துளீர்கள். ஆகவே அது குறித்த விசாரணையே இடம்பெறுகின்றது,  கேள்வி:- உங்கள் மீதான குற்றச்சாட்டுக

மரண தண்டனை பெறுவோரின்விபரம் வெளியீடு: முஸ்லிம் ஒருவர் உட்பட

Image
போதைப்பொருள் குற்றத்தில் மரணதண்டனை பெறவுள்ளோரின் பெயர்ப்பட்டியல் வெளியானது!  (2 சிங்களவர்கள் 1 தமிழர் 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனை) போதைப்பொருள் வழக்கில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள் 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் . இதன் முதற்கட்டமாக 2 சிங்களவர், ஒரு தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.  அந்த 20 பேரின் பெயர்கள் பின்வருமாறு, எம்.கே. பியதிலக்க எம் .தர்மகரன் எம்.எஸ்.எம் .மஸ்தார் ஜே.ஏ. பூட் பி .ஜே .போல்சிம் எஸ் .புண்ணியமூர்த்தி கே.எம். சமிந்த எஸ் கணேசன் டபிள்யு . விநாயகமூர்த்தி எஸ்.ஏ. சுரேஷ்குமார் எம். குமார் எஸ். மசார் டபிள்யு. ரங்க சம்பத் பொன்சேகா எஸ் முஹம்மது ஜான் பெருமாள் கணேசன். ஆர்.பி சுனில் கருணாரத்ன சையித் முகமது உவைஸ் எம்.எஸ்.எம் .மிஸ்வர் பி கமிலஸ் பிள்ளை ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல். இவர்களில் நால்வரே முதற்கட்டமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். குறிப்பு: மேலுள்ள பட்டியலில் அ

7ஆம் திகதி, முஸ்லிம்களுக்கு எதிராக தலதா மாளிகையில் பிக்குகள் மாநாடு!

Image
பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி - தலதா மாளிகை திடலில் பிக்குகள் மாநாடு இடம்பெறவுள்ளது.  இதில் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்திற்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் முக்கிய விடயமாகமென பொதுபலசேனா தெரிவித்துள்ளது.  இந்த மாநாட்டிற்கான அஸ்கிரிய , மல்வத்து மற்றும் சியம் ஆகிய முக்கிய மூன்று பௌத்த பீடங்களின் ஆசீர்வாதம் குறித்து கேள்விகள் காணப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் ஆடை விவகாரம் , ஹலால் , மத்ரஷா , காதிக்கோர்ட் சட்டம் மற்றும் தௌஹீத் பள்ளிவாயல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளன. from Ceylon Muslim - https://ift.tt/2ZZv2v9 via Kalasam

ரிஷாத், ஹிஸ்புல்லாஹ், சாலிக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை -உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Image
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அ சாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார்.  தெரிவுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்தார். இவரது சாட்சியம் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த போது பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார்.  குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இதுதொடர்பாக கிடைத்த கடிதத்தின் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தெரிவுக்கு குழுவின் பிரதி இணைப்பென இது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி மேலு

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

வென்றார் ரிஷாத் - தெரிவுக்குழு முன்னிலையில் அதிரடி ஆதார பதில் வழங்கினார்

Image
(ஆர். சிவராஜா) ரிஷார்ட்டின் சாட்சியத்தையடுத்து விசேட அறிவிப்பொன்றை விடுத்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான ஆனந்தகுமாரசிறி ,பதில் பொலிஸ் மா அதிபர் நியமித்த விசேட பொலிஸ் குழு – தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுடன் ரிஷார்ட்டுக்குதொடர்பில்லையென்று தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதாக கூறியதுடன் அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார். ”வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. இவர்களை இஸ்லாத்தில் ஏற்கமுடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம் செயல்பட வேண்டும் ” என்று முன்னாள்அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியங்களை அளிக்கும் போதுஅவர் இவ்வாறு கூறினார். கே. – ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா? ப. – கடந்த அக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு என்னை அழைத்தனர்.ஆனால் ஆனால் நான் செல்லவில்லைஇதனால் என்மீது குற்றம் சாட்டினர், . மற்றொரு எம்.பியும்

தங்கொடுவை: முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்ய நீதிமன்றம் அனுமதி

Image
வென்னப்புவ பிரதேச சபையின் கீழ் இயங்கும் தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதி வழங்குமாறு மாறவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து வென்னப்புவ பிரதேச சபை தலைவரினால் அண்மையில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இது தொடர்பில் இன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவரிடம் மாறவில நீதவான் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டிருந்ததுடன் அனைத்து தரப்பினருக்கும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. from Ceylon Muslim - https://ift.tt/2ISm39u via Kalasam

19வது: திருத்தியவரே மீண்டும் திருத்த வேண்டும் என்கின்றார்

Image
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போன்று, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய சர்ச்சைகள் காணப்படுவதை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.  19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சர்ச்சைகள் காணப்படுவதாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து, 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை தயாரித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தெளிவூட்டிய போதே இதனைக் குறிப்பிட்டார்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்வதாக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அழுத்தங்களின் பிரகாரம், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப

ஷாபி மீதான வழக்கு : 210 பக்க அறிக்கை நீதிமன்றில், குற்றச்சாட்டு பொய்!

Image
குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமான விடயங்கள் அடங்கிய 210 பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  குருநாகல் பிரதான நீதவான் முன்னிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.  பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதாக வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயமும் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வைத்தியர் ஷாபிக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடனோ அல்லது வேறு பயங்கரவாத அமைப்புக்களுடனோ எவ்வித தொடர்புமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது வரை 500 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  வைத்தியர் ஷாபி குருணாகல் போதனா வைத்தியசாலையில் 4372 சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதில் 3479 சிங்கள தாய்மார்கள, 860 தமிழ் தாய்மார்கள், 33 முஸ்லிம் தாய்மார்களும் அடங்குகின்றனர்.  அதேநேரம் அவர் சிங்கள மற்றும் தமிழ் தாய்மார்கள

இன்று 2 மணிக்கு சாட்சியம் வழங்குகிறார் ரிஷாத் பதியுதீன்

Image
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.  இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளார்.  ரிஷாத் பதியுதீன் கடந்த 26ம் திகதி சாட்சியம் வழங்குவதற்காக தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜரான போதிலும் அவரிடம் விசாரணை நடத்தாமல் ஒத்தி வைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  அதன்படி இன்றைய தினம் 02 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். from Ceylon Muslim - https://ift.tt/2KILsod via Kalasam

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

The wire cutter

கோட்டா வேட்பாளரானால் நான் எதிர்ப்பு : குமார வெல்கம

Image
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால் தான் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார்.  கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.  தனது நிலைப்பாட்டை ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்தே தெரிவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.  கொலையுடன் தொடர்புபட்ட நபர் இருப்பாராக இருந்தால், குறித்த நபர் கொலை செய்தவர் என்று மக்களிடம் கருத்து நிலவுமானால் அவருக்கு ஆதரவு வழங்குவதில்லை என்று கூறினார்.  எல்லா அரசாங்கமும் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கொலைகளை செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறியுள்ளார். from Ceylon Muslim - https://ift.tt/2LwxmWT via Kalasam

கைது செய்யப்பட்ட மில்ஹான் கூறியதால், வெடிபொருட்கள் மீட்பு

Image
கைது செய்யப்பட்டுள்ள மில்ஹானை விசாரித்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மில்ஹான் என்பவரை விசாரித்தபோது அவர் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை இன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒல்லிக்குளம் பிரதேசத்திற்கு அழைத்து சென்ற நிலையில், காணி ஒன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் கூர் 300க்கும் அதிகமான தொகை, மற்றும் டெட்டனேட்டர் 1000 , திரவ ஜெலட்னைட் 8 லிட்டர் , T 56 தோட்டாக்கள் 475 உற்பட பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன from Ceylon Muslim - https://ift.tt/2KG73O5 via Kalasam

அவசரகால சட்டம் நீடிக்க கூடாது - பாராளுமன்றில் அமீர் அலி

Image
அவசரகால சட்டத்தை நீடிப்பதன் மூலம் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி, சாதாரண விடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் விவாதம் தொடர்பிலான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். from Ceylon Muslim - https://ift.tt/2NiWEKx via Kalasam

முஸ்லிம்கள் பற்றிய அஸ்கிரிய மாநாயக்க தேரரின் கருத்துக்கு தலாய்லாமா கடும் கண்டனம்.

Image
நான் ஒரு பெளத்தன், பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும் நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கிறேன் எனத் தெரிவித்துள்ள அவர், முஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் முஸ்லிம்கள் மீது கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட வேண்டிய ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பாரிய தவறாகும் எனவும் தலாய் லாமா மேலும் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - https://ift.tt/2XcZF3D via Kalasam

இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடிய ஜனாதிபதி- அவசர கலந்துரையாடல்

Image
தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மேற் குறிப்பிட்ட நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகத் தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இனிவரும் காலங்களிலும் இலங்கைக்குப் பொருளாதார உதவிகளை வழங்குமாறும், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு விடுத்துள்ள தடைகளை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டிய ஜன

ஷாபி விவகாரம் : சாட்சியம் இல்லையென நீதிமன்றத்திற்கு CID அறிவிப்பு

Image
வைத்தியர் ஷாபிக்கு எதிரான எந்த முறைபாடுக்கும் சாட்சிகள் இல்லை CID நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளது.  The Criminal Investigations Department (CID) informed court today that there was no evidence to prove the allegations made against Dr. Shafi Shihabdeen, the doctor attached to the Kurunegala Teaching Hospital. OIC of the CID Gang Robberies Branch IP Nishantha Silva made the submission to court when the case was heard today. The doctor had been accused of illegally sterilizing several women during operations he had conducted, preventing them from being able to give birth again. However the family of the doctor has denied the allegations made against him. The Criminal Investigations Department (CID) has recorded statements from over 750 people with regards to allegations made against Dr. Seigu Siyabdeen Mohamed Saafi. from Ceylon Muslim - https://ift.tt/2ZUupTP via Kalasam

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியானது

Image
அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை : 13/2019(1) எனது இலக்கம்: EST-7/UNIFO/06/V பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு சுதந்திர சதுக்கம் கொழும்பு 07. 2019.06.26 அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச உத்தியோகத்தர்களின் உடை ——————————————— 1989.02.01 ஆம் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 8/89க்கு மேலதிகமாக அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடையதாகும் வகையில் 2019.05.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 13/2019னை திருத்தம் செய்து அதற்குப் பதிலாக இச்சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு 2019.06.25 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 02. 2019.04.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2121/1 மற்றும் 2019.05.13 ஆந் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2123/4 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளை உமக்கு கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் உத்தியோகத்தர்கள் கண்டிப்பாகப் பின

ஜா-எல பள்ளிவாயலை அகற்ற மகஜர் கையளிப்பு

Image
நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஜா - எல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை, உடன் அங்கிருந்து அகற்றுமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தெளஹீத் ஜமா அத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. ஜா - எல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டியுமே குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரில் 2,100 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஏக்கல மக்கள் ஒற்றுமை அமைப்பின் ஊடாக, ஜா - எல பிரதேச செயலகம் மற்றும் ஜா - எல பொலிஸ் நிலையம் ஆகியவற்றிட்கு இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. ஏக்கல ஸ்ரீ வாலுகாராம புராண விகாரையின் பிரதானி நாரம்பனாவே விமலஜோதி தேரர் மற்றும் கொட்டுகொடை புனித கைதானு ஆலய பரிபாலகர் சிறியானந்த பெர்னாண்டோ ஆகிய

ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைதிரி..?

Image
மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையே ஜனாதிபதி வேட்பாளராக இறக்குவதற்கு அவர் தலைமைவகிக்கும் அந்தக் கட்சியின் மத்திய குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது என்றும் அதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மஹிந்த தரப்புக் கட்சியான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான அரசியற் கூட்டணி தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்து தயாசிறி ஜெயசேகர மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்ததுடன் பேச்சுவார்த்தையினை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து பெரமுனவுடனான பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்கான குழுவிற்குநிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர