கைது செய்யப்பட்ட மில்ஹான் கூறியதால், வெடிபொருட்கள் மீட்பு

கைது செய்யப்பட்டுள்ள மில்ஹானை விசாரித்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மில்ஹான் என்பவரை விசாரித்தபோது அவர் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை இன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒல்லிக்குளம் பிரதேசத்திற்கு அழைத்து சென்ற நிலையில், காணி ஒன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலட்னைட் கூர் 300க்கும் அதிகமான தொகை, மற்றும் டெட்டனேட்டர் 1000 , திரவ ஜெலட்னைட் 8 லிட்டர் , T 56 தோட்டாக்கள் 475 உற்பட பல வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன


from Ceylon Muslim - https://ift.tt/2KG73O5
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter