கோத்தாவுக்கு பதிலாக வேறு வேட்பாளர் தயார்?

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ளரும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருப்­பதால் மாற்று வேட்­பாளர் ஒரு­வரை தயார் நிலையில் வைத்­தி­ருப்­பது குறித்து எதி­ரணி ஆலோ­சித்­துள்­ளது. 

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் பிர­ஜா­வு­ரிமை தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனு மீதான விசா­ரணை நாளை 2 ஆம் திகதி முதல் இடம்­பெ­ற­வுள்­ளது. 
4 ஆம் திகதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் இடைக்­கால தடை­யுத்­த­ரவு ஏதேனும் வழங்­கப்­பட்டால் மாற்று வேட்­பாளர் ஒரு­வரை தயார் படுத்­து­வது நல்­லது என்ற நிலைப்­பாட்டை எதி­ரணி கொண்­டுள்­ள­தாக தெரி­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில் நேற்­று­மாலை எதி­ர­ணியின் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2o0JVjt
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?