வெளிநாடு சென்ற இலங்கையர்களில் 1043 பேர் உயிரிழப்பா...?
வெளிநாடு சென்ற இலங்கையர்களில் 1043 பேர் உயிரிழப்பா...?
வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களில் 1043 பேர் கடந்த மூன்று வருடங்களில் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் 29 நாடுகளுக்கு சென்றிருந்தார்கள். அவர்களுள் இந்த 1043 பேரும் உள்ளடங்குவதாக அந்த பணியகத்தின் பிரதி முகாமையாளர் ஜெகத் படுகெதர தெரிவித்தார்.
வேலைவாய்ப்புக்களுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்கு சென்று கொடுமைக்குள்ளாகும் இலங்கையர்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கேசரிக்கு தெரிவித்தார்.
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர் விபத்துக்கள் , தற்கொலைசெய்து கொள்ளல் ,இயற்கை மரணம் , அந்த நாடுகளின் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் தண்டனை வழங்கப்படல் உள்ளிட்ட காரணங்களினாலேயே அதிகளவிலான இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 194 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கடந்த 2018 இல் 239 பேரும் , 2017 இல் 291 பேரும் , 2016 ஆம் ஆண்டில் 295 பேரும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சவுதி அரேபியாவிற்கு சென்ற 362 பேரும் , குவைத்திற்கு சென்ற 214 பேரும் கட்டாருக்கு சென்ற 133 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்ற 125 பேரும் , தென்கொரியாவில் 32 பேரும் உயிரிழந்துள்ளனர். தொழில் அனுபவம் குறைந்த தொழிலாளர்களே இவ்வாறு அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று உழைப்பவர்கள் மொத்த தேசிய வருமானத்தில் 7.9 வீத பங்களிப்பினை வழங்கு கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரியும் இலங்கையரினால் மாத்திரம் சுமார் 70 இலட்சம் அமெரிக்க டொலர் அன்னியச்செலவாணி வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பின் நிமித்தம் செல்வோர் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக செல்லும் பட்சத்தில் காப்புறுதி பெற்று செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.
அவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும் காலப்பகுதியில் ஏற்படும் உயரிழப்புக்களையடுத்து அவர்களது உறவினர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே தொழில் நிமித்தல் வெளிநாடுகளுக்கு செல்வோர் தமது கடவுச்சீட்டில் காப்புறுதி செய்து கொள்வது அவசியமானதாகும்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2Sqjelp
via Kalasam
Comments
Post a Comment