முஸாதிக்காவுக்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்..!
இவ்வருடம் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் திருமலை மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று வைத்தியத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவி 
M.F.முஸாதிக்காவின் வீட்டிற்கு இன்று (28.12.2019) முன்னாள் பிரதியமைச்சர் கௌரவ அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்கள் நேரில் சென்று குறித்த மாணவிக்கும் அம்மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கி கௌரவபடுத்தியுள்ளார்.
குறித்த மாணவி எதிர்காலத்தில் மேலும்பல வெற்றிகளைப் பெற்று தனது மருத்துவக் கற்கை நெறியினூடாக சிறப்புற்று நம் பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு அதற்கான சிறந்த முன்னெடுப்புகளும் திட்ட ஒழுங்குகளும் வழிவகுக்கப்பட்டு சிறந்தமுறையில் செயற்படுத்தப்பட நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/3559ujd
via Kalasam

Comments
Post a Comment