உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதானோர் இருவருக்கு பிணை...!
- பாறுக் ஷிஹான் -
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேர் செவ்வாய்க்கிழமை(31) மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களுள் 61 பேரை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இருவருக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டதுடன் ஏலவே ஒருவரது வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் குறித்த குண்டு தாக்குதலை ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்ட பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் சஹரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேரை சஹ்ரானின் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்றி பெற்ற மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட 64 பேரில் ஒருவருக்கு கடந்த தவணைகளில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2sAJFtS
via Kalasam
Comments
Post a Comment