தோப்பூர் செல்வநகர் பகுதியில் 525 ஏக்கர் காணியை அரசாங்கம் அபகரிக்க முயற்சி


பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான தோப்பூர் செல்­வ­நகர் காணி­களை அரசு அப­க­ரிக்க முயற்சி செய்­வ­தாக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார். குறித்த பகு­திக்கு செவ்­வாய்க்­கி­ழமை விஜயம் செய்­தபின் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளி­யிட்ட அவர்,

சுமார் எழு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக தோப்பூர் செல்­வ­நகர் மக்­களால் விவ­சாய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளும் 525 ஏக்கர் விவ­சாய காணிகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை யாரும் இல்­லாத சந்­தர்ப்­பத்தில் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தால் அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்­ளன.

கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்பும் இந்தப் பகு­தி­யி­லுள்ள காணிகள் விகா­ரைக்­கு­ரிய காணி­க­ளெனத் தெரி­வித்து அப­க­ரிக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு எமது தலை­யீட்டால் அவை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இப்­போது வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம் மூலம் இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வதால் இதற்குப் பின்­ன­ணியில் பாரிய இன­வாத சக்­தி­களும் அவற்றின் நீண்­ட­காலத் திட்­டங்­களும் காணப்­ப­டு­கின்­றன என்ற சந்­தேகம் வலுப்­பெ­று­கி­றது.

எனவே, பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான இந்தக் காணிகளை கைப்பற்ற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாதென அவர் தெரிவித்தார்.-

#Vidivelli


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2VtoVR1
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!