கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 110 ஐ எட்டியது
இலங்கையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 110 கொரோனா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் நான்கு பேர் கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் 199 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2wMtQT9
via Kalasam
Comments
Post a Comment