சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா வீதம், 2 தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் 10 லட்சத்திற்கும் குறைவான வங்கிக் கடன் பெற்ற அரச பணியாளர்களின் மாதந்த கடன் அறவீடுகளை ஏப்ரல் மே மாதங்களில் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
20 லட்சம் சமூர்த்தி பயனாளிகள் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனரும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2vYFMkd
via Kalasam
Comments
Post a Comment