புத்தளம்: வரவு செலவு திட்ட பணம் மக்கள் பாவனைக்கு.



-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

புத்தளம் நகர சபை இவ்வருடத்திற்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து அரைவாசியை கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், உலர் உணவு பங்கீடுகளுக்கும் ஒதுக்கியது.

புத்தளம் நகர சபையின் விஷேட கூட்டம் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் நேற்று (27) சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது நகர சபையின் பணிகளை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நகர சபை உத்தியோகத்தர்களின் சேவை விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதோடு அவர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் அண்மையில் இந்தோனேசியா நாட்டிற்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று நோய் இருப்பதாக சந்தேகப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியதற்காக ஏனைய அரச திணைக்களங்களோடும், இடர் முகாமைத்துவ திணைக்களத்துடனும் இணைந்து புத்தளம் நகர சபை செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெளியிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக புத்தளம் நகர சபை எல்லைக்குள் வருபவர்களுக்கு நகர சபையினால் இலவசமாக முககவசங்களை ( மாஸ்க்) வழங்குவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/33S2A1t
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!