இத்தாலியில் இவ்வளவு கொடூரம் ஏன் எதனால்?
தமிழில்: மும்தாஸ் முபாரக் (இத்தாலியில் இருந்து)
பாதுகாப்பு மற்றும் அவசரகால நிலைமை முகாமைத்துவ நிபுணராக இத்தாலியில் கல்வி கற்றும் தொழில் புரிந்தும் உள்ளவராக, என்னால் இந் நிலைமைக்கான பிரதானமாக 5 காரணங்களை குறிப்பிடலாம்.
1.அதிகளவான முதியவர்கள்
Italy உலகிலேயே 6வது நீண்ட ஆயுள் எதிர்பார்ப்பு கொண்ட நாடாகவும் ஜப்பானுக்கு அடுத்து அதிக முதியவர்கள் வாழக்கூடிய நாடாகவும் காணப்படுகிறது.இங்கு 22.6% ஆனோர் 65 வயதை தாண்டியவர்கள்(2018 இல்).இது ஐரோப்பாவிலேயே அதி கூடிய விகிதாசாரமாக உள்ளது.மற்றும் இத்தாலி மக்களின் ஓய்வூதிய வயது 67 ஆகும்.இது மற்ற வளர்ந்த ஐரோப்பிய நாடுகளைவிட 2 வருடங்கள் அதிகமாகும்.மருத்துவ ஆராய்சிகளின்படி முதியவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாகும்.
2.நெருங்கிப்பழகும் வழக்கம்(Physically)
இத்தாலியர்கள் social distance ஐ பேணுபவர்கள் அல்ல.கட்டியணைப்பு முத்தங்கள் என்பன தமது உறவுகளிடையே மாத்திரமல்லாது நண்பரகள் ஒன்றாக தொழில் புரிபவர்கள் என பலருடனும் மேற்கொள்வார்கள்.அது மட்டுமன்றி அடுத்த நாடுகளை விடவும்தனிநபர்களுக்கிடையான தூரம்(personal space) மிக குறைவாகப் பேணுவார்கள்.
3.அடர்த்தியான மக்கள் தொகை
இத்தாலி அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாடாகும்.இது ஒரு சதுர மைலுக்கு 533 ஆகும்.இது அமெரிக்காவில் 94 ஆகும்.அதிலும் ⅔ பகுதியினர் நகர்ப்புரங்களிலேயே வாழ்கிறார்கள்.இது Rome இல் சதுர மைலுக்கு 5800 ஆகவும் அதிக பாதிப்பு கொண்ட Milan இல் இது 19,000 ஆகும். இது ஜேர்மனின் Berlin, அமெரிக்காவின் Washington ஐ விட இரு மடங்காகும்.
4.வட இத்தாலியே நாட்டின் வணிக மையமாகும்.
இத்தாலியின் வடக்கே அமைந்துள்ள Milan நகரமே இந்த நாட்டின் வணிக, நிதியியல் தலை நகரமாகும்.உலகத்தின் பல பாகங்களிலுருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இங்கு வந்து போவார்கள்.அத்துடன் China உடனான கல்வி, வணிக தொடர்பும் இங்கு அதிகம் காணப்படுகிறது.இந் நோயினால் அதிகம் பாதப்புக்கள்ளாகி இருப்பது வட இத்தாலியாகும்.
5.அதிகப்படியான நோய் தொற்றாளர்கள்.
March 25 வரைக்கும் China தான் Italy யை விட அதிக எண்ணிக்கையான நோயாளர்களை கொண்ட நாடாக இருந்தாலும் நோய் பரவும் வேகம் அவர்களை விட பல மடங்கு அதிகமாக காணப்பட்டது. இந் நிலைமையில் இத்தாலிக்கு ஒப்பிடும் அளவில் எந்த நாடும் இருக்கவில்லை. எனவே இவர்களுக்கு யாரிடமும் இதை எப்படி முகாமைத்துவம் பண்ணலாமென்ற முன்மாதிரி பெற முடியவில்லை.சீன நிபுணர் குழு இங்கு வந்த போதும் நிலைமை கட்டுப்பாட்டை தாண்டிச்சென்றிருந்தது.Community outbreak பல கட்டங்களை தாண்டி இருந்தது.
எவ்வாராயினும் இதை வெற்றி கொள்ள இத்தாலி கடுமையாக துணிச்சலுடன் போராடி வருகிறது
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/3bCumC0
via Kalasam
Comments
Post a Comment