செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட நபரின் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்.
( மினுவாங்கொடை நிருபர் )
கொரோனா தொற்று தொடர்பிலான செய்திகளை வெளியிடும் போது ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதியன்று ஊடக நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தினால், ஏற்கனவே (06) அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியுடன் மற்றுமொரு கடிதம் (25) அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில்,
"சில சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்திகளை வெளியிடும் போது, சம்பந்தப்பட்ட நபர்களுடைய அடையாளங்கள், வேலை செய்யும் இடம், தொழில், குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள், குடும்பங்களின் அல்லது குழுக்களின் அடையாங்களை வெளிப்படுத்தும் விதத்திலான செய்திகளை வெளியிடுவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, அந்தக் கடிதத்தில் உள்ள 03, 04 மற்றும் 05 ஆவது பகுதிகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறும் வேண்டிக் கொள்கின்றேன்" என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவின் கையொப்பத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bIorM0
via Kalasam
Comments
Post a Comment