பௌத்த சமய பாடத்தில் A சித்தி பெற்று அசத்திய மொஹமட் றஸ்லான்.
குருநாகல் மலியதேவ கல்லூரியில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியிருந்த சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் குருநாகல் கிரிஉல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மொஹமட் றிஸ்மி மொஹமட் றஸ்லான் எனும் மாணவன் நேற்று (27) வெளியாகிய சாராதணதரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று அரிதான சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த மாணவன் 8 பாடங்களில் ‘ஏ’ சித்தியும் 1 பாடத்தில் ‘பி’ சித்தியும் பெற்றுள்ளார்.
புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து குறித்த பாடசாலைக்கு தெரிவாகிய குறித்த மாணவன் இஸ்லாம் பாடத்தை கற்பதற்கான சூழ்நிலை அந்த பாடசாலையில் கிடைக்காததன் காரணமாக புத்த சமய பாடத்தை கற்று அதில் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் – ஏ.அகீல் சிஹாப்
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2SbxNIj
via Kalasam
Comments
Post a Comment