ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் இன்றும் பதிலடி; தடுமாறும் சுகாதாரத் துறை!
இன்றைய தினம்(29) கொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 3 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தகனம் செய்வதற்காக 3 முஸ்லிம் குடும்பங்களிடம், கையொப்பம் கேட்டபோது இல்லை, கையொப்பம் போட முடியாது என திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அந்த 3 ஜனாஸாக்கள் உள்ளிட்ட மொத்த 5 கொரோனா ஜனாஸாக்கள் தொடர்பில், என்ன செய்வதென்று தெரியாமல் இழுபறியும், தாமதமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொரோனா மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது பாரிய மனித உரிமை மீறலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
அத்துடன் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை நாளை தினம்(30) முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஹாசில் (ஊடகவியலாளர்)
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/33u2Ftg
via Kalasam
Comments
Post a Comment