ஜனாஸா எரிப்புக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நல்லடக்கம் செய்ய அரசு அனுமதியளிக்குமாறும் கோறி புத்தளம் கொழும்பு முகத்திடலில் புத்தளம் இளைஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த அமைதி பேரணி நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றது

மேற்படி பேரணி காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து 11.00 மணி வரை இடம் பெற்றது.மேற்படி பேரணியினால் புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் பின்வரும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி நின்றனர்.முஸ்லிம்களின் ஜனாஸாவை கபனிடும் முறையில் ஜனாஸா ஒன்றும் இதன் போது காட்சிப்டுத்தப்பட்டது.

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு அப்பட்டமான மனித உரிமை மீறல்.
எரிக்காதே!எரிக்காதே!
மனிதர்களின் பிரேதங்களை எரிக்காதே!
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாதே!.
பலவந்த ஜனாஸா எதிர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பச்சிளம் பாலகனின் சாம்பர் துகள்களில் நீதி உயிர்த்தெழட்டும்.
அதி மேதகு ஜனாதிபதி அவர்களே ஜனாஸா எரிப்பை தடுத்து நிறுத்துங்கள்.
என் தாயை எரிக்காதே!
என் தந்தையை எரிக்காதே! என் பாலகனை எரிக்காதே!
ஜனாஸா நல்லடக்கம் எங்கள் மதச் சுதந்திரம்.அதில் கை வைக்காதே!
WHOவின் பரிந்துரையை அமுல்படுத்து.
இனவெறித் தீயில் எரியும் ஜனாஸாக்கள்.அரசியல்வாதிகளே தடுத்து நிறுத்துங்கள்.
மக்கள் ஆணை பெற்ற பிரதிநிதிகளே!ஜனாஸா எரிப்பை தடுத்து நிறுத்துங்கள்.
அரசே! கொரோனா விவகாரத்தில் நிபுணர்களின் சொல்லைக் கேள்.
191 நாடுகளில் நல்லடக்கம்! இங்கே தகனம் ஏன்?
அரசே! முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாதே! போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

புத்தளம நகர சபை தலைவர்,புத்தளம் நகர,பிரதேச சபை உறுப்பினர்கள்,சர்வ மதத் தiலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.பேரணியின் இறுதியில் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவென மகஜரொன்றும் கையொப்பமிடப்பட்டது.


- இர்ஷாத் றஹ்மத்துல்லா 




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/37QDDHA
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்