கொரோனாவில் 30வயது முஸ்லிம் இளைஞர் மரணம் : இறுதி கிரியை நடத்துவது தொடர்பில் பாரிய குழப்பத்தில் சுகாதார பிரிவு
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில், கொவிட் தொற்றினால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி − இறக்குவானை நகரில் இந்த கொவிட் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை நடத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், இலங்கையில் முதலாவது முஸ்லிம் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
வர்த்தமானி மாத்திரமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த உடலை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பில் தம்மால் தீர்மானமொன்றை எட்ட முடியாதுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, இறக்குவானையில் கொவிட் தொற்றினால் பதிவான முதலாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2ObyfYg
via Kalasam
Comments
Post a Comment