ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு என்னதான் நடக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன.
எதிராக 15 நாடுகளும் கருத்துகளை முன்வைத்துள்ளன. அத்தோடு வாக்கெடுப்பின் போது மேலும் சில நாடுகள் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானத்தை முன்வைப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன.
இதற்கு பிரித்தானியா தலைமைத்துவம் வழங்கவுள்ள நிலையில் அதற்கு இலங்கை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.
இந்நிலையில் பிரித்தானியா, நோர்வே, கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில் பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.
மேலும் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலைதீவுகள், கியூபா, நிகரகுவா, எரிட்ரியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ், அஜர்பைஜான், பெலாரஸ், வட கொரியா, காபோன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இவற்றில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் கூட 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையை கொண்டிப்பதாக த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2ZTCeej
via Kalasam
Comments
Post a Comment