அமைச்சர் அலி ஸப்ரி அவர்களின் புர்கா தடை அறிவிப்பு சரியானதா?



ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக அறிவிக்கும் அதேவேலை அமைச்சர் புர்கா தடை செயப்படுவதாகவும் அறிவித்தார்.

உண்மையில் இது சரியான வழிமுறையா?

இந்த நாட்டிற்கு நாம்வந்தேறு குடிகள் அல்ல. நாம் இந்த நாட்டின் பூர்வீக பிரஜைகள். ஏனைய மக்களுக்கு உள்ள உரிமையே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் உண்டு. முஸ்லிம் மக்களின் உரிமைகளை ஏனைய இன மக்கள் தீர்மானிக்கும் நிலைக்கு முஸ்லிகம்களை ஆளாக்கக்கூடாது.

ஏனைய இனங்களுக்கு வரையறை இன்றி திறந்து உடுப்பதற்கு அனுமதி இருக்குமேயானால், முஸ்லிம் சமூகத்திற்கும் மூடி உடுப்பதற்கும் அனுமதி உண்டு.

புர்கா தடை செய்யப்படும் அளவுக்கு இந்த நாட்டில் புர்கா அணிந்து கொண்டு போய் எந்த நாசகாரச் செயலும் நடைபெறவில்லை. இதை இன உரிமையை பறிக்க ஒரு சந்தர்பமாகவே பயண்படுத்துகின்றனர். இதற்கு நாமே துனை போவது ஒரு கவலைக்குறிய விடயமாகும். ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஜனாஸா அடக்கம் செய்யும் கடமையையும் உரிமையையும் பெற்றுத்தர முடியாமல் போன நிலையில், நமது உரிமையை பறிக்க உதவுவது தவறான வழி முறையாகும்.

முகத்தை மறைப்பதையும் மறைக்காதிருப்பதையும் முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும்.

ஜனாஸா அடக்கும் அறிவிப்போடு சேர்த்து இதையும் அறிவித்ததானது, ஜனாஸா அடக்கத்தை எதிர்த்த இனவாதிகளின் மனதை குளிர வைக்கை செய்த ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. அடுத்தது சட்டம் அமுலாகும் முன் இவ்வாறான அறிவிப்பானது தற்சமயத்தில் இருந்தே இன வாதிகள் சட்டத்தை கையில் எடுக்க வாய்பாக அமையும்.

மேலும் முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயனிகள் அதிகமா முகத்திறை அணிந்தே வருகின்றனர். இதை அரசுக்கு எடுதுறைப்பதன் முலம் இதை ஒரு சந்தர்பமாக பயண்படுத்தி, முகத்திரை தடையை தடுக்க, இதை ஒரு சந்தர்பமாக பயண்படுத்தி இருக்கலாம். மேலும் சுற்றுலாப் பயணிகளினால் இவ்வாரான பிரச்சினை நாட்டுக்குள் ஏற்படும் நிலையில், இது உள்நாட்டு முஸ்லிம்களின் தலையில் பொழுது விடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜனாஸா அடக்கும் உரிமை உலகலாவிய ரீதியில் மனித குலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமையாகும். இது இன வெறி கொண்ட இனவாதிகளால் எமது நாட்டில் இது பறிக்கப்பட்டது. இதை நாம் பெற்று கொள்ள இன வாதிகளை திருப்திப்படுத்த வேண்டியதில்லை.

மேலும் கடந்த காலத்தில் நடந்த அசம்பாவிதங்களின் போது நாட்டில் முகத்திறை தற்காலிகமாக தடை செய்யப்பட்ட போது? மகாநாடு கூடி உரிமைக்காக வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று சூளுறைத்தவர்கள், இந்த அரசாங்கம் இதை தடைசெய்ய முற்படும் போது பேசாமல் வாய் பொத்தி இருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

இவர்கள் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் போது மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி அடக்கும் உரிமைக்காக ஜனநாயக ரீதியில் போராடாமல், A/C Room இல் இருந்து letter எழுதி விட்டு, A/C Room இல் இருந்தே சாம்பல் பத்வாவை எழுதி சாம்பலை அடக்க மார்கத்தில் அனுமதியுண்டு என மக்களை ஏமாற்றி, அரசுக்கு வக்காலத்து வாங்கி, அரசின் இன உரிமை ஒளிப்பு இடைத்தரகர்களாக செயற்பட்டது போல் இதிலும் செயற்படுவார்களா? முஸ்லிம்களின் மார்க உரிமைகளின் காப்பாளர்கள் என்பதை வஃன் என்ற நோய் இவர்களை திசை திருப்பி விட்டது.

மக்களுக்கு பிரச்சினை வரும்போது ஓடி ஒளிந்து தியானத்தில் இருப்பது இஸ்லாமிய தலைமைதுத்துவத்தின் வழிமுறை அல்ல மக்களோடு மக்களாக இருந்து இறைவனிடம் உதவி தேடியவர்களாக பிரச்சினையில் இருந்து மக்களை காப்பாற்றுவதே தவைமைத்துவம்.


இதற்கான வழிமுறையையே நம் தலைவர் ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம் அவர்களும் அவரை தொடர்ந்து வந்த இஸ்லாமி ஆற்சியாளர்களின் வாழ்விலும் அவர்கள் நமக்கு காட்டித் தந்தார்கள்.


எனவே இந்த நாட்டில் நாம் வாழ எமது உரிமைகளை ஏனனைய சமூகங்களுக்கு லஞ்சமாக கொடுக்கும் நிலமையை நம் அரசியல் தலைமைகள் உருவாக்கக் கூடாது .


-பேருவலை ஹில்மி



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3uHZsT6
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்