பிணைமுறி வழக்கு: ரவி உள்ளிட்ட 7 பேர் பிணையில் விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரியவர்களை இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணை முறி விநியோகத்தில் 15 பில்லியன் ரூபாவை முறையற்ற வகையில் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3fx1Uqo
via Kalasam

Comments
Post a Comment