அமெரிக்க வங்கி கணக்குகளை ஹேக் செய்து பாரிய அளவில் பண மோசடி செய்த இலங்கையர் கைது.
அமெரிக்க வங்கி கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட 41வயதான சாவகச்சேரியை சேர்ந்த நபரொருவர் இன்று (31) கைது செய்யப்பட்டார்.
இவரின் தனியார் வங்கி கணக்கில் 13.4 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் அமெரிக்காவிலுள்ள நண்பர்கள் உதவியுடன் நிதியை பெற்றுள்ளது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை குற்றப் புலனாய்வுதுறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
Siva Ramasamy
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2PKjLz0
via Kalasam

Comments
Post a Comment