ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னைப் பற்றிய போலியான பிம்பத்தை உருவாக்கியுள்ளது - உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அறிக்கை




உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்கையால் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­ய­வர்­களுள் நானும் ஒருவன். அறிக்கை என் மீது சுமத்­தி­யி­ருக்கும் குற்­றச்­சாட்­டுக்­களை அவதானிக்­கும்­போது எனது உண்­மை­யான நிலையைப் புறக்கணித்து என்னைப் பற்­றிய போலி­யான பயங்­க­ர­மா­ன­தொரு பிம்­பத்தைத் தோற்­று­விப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது என பயங்கரவாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ள ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தான் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் எழு­திய விளக்க அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.


11.03.2021 திக­தி­யிட்டு ‘என் மீதான அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்கள்’ எனும் தலைப்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள 38 பக்­கங்கள் கொண்ட குறித்த அறிக்­கையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், ஜமா­அதே இஸ்லாமி மற்றும் அல் ஹஸனாத் சஞ்­சிகை தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்றச்சாட்டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.


குறித்த அறிக்­கையில் ‘விசா­ர­ணைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு குற்­றம்­ சாட்­டப்­பட்டேன்’ எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டவன் என்ற வகையில் இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டிய தொரு விட­யமும் இருக்­கின்­றது.


அப்­போது என்னைக் கைது செய்­த­வர்கள் என் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்­த­வில்லை. மாறாக விசா­ர­ணைக்கு அழைத்துச் செல்­கிறோம் என்று கூறி அழைத்துச் சென்ற பின்­னரே நான் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­வித்­தார்கள்.


அவ்­வாறு அழைத்துச் சென்ற மறுநாள் சில சிங்­களப் பத்­தி­ரி­கைகள் என் மீதான குற்­ற­சாட்­டுக்கள் அனைத்தும் ஆய்வு செய்­யப்­பட்டு உறுதிப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டதைப் போன்று மிக மோச­மான வகையில் சோடனை செய்து பிர­சு­ரித்­தி­ருந்­தன. அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலி­யா­னவை, அபாண்டமானவை என அப்­போதே எமது மக்கள் பேச ஆரம்பித்தனர். எனது உண்மை நிலையை வலி­யு­றுத்தி எனக்­காக எழு­தவும் பேசவும் செய்­தனர்.


அதே குற்­றச்­சாட்­டு­கள்தான் இப்­போது ஆணைக்­கு­ழுவின் அறிக்கையில் எனக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் பின்ன­ணியில் பார்க்­கும்­போது இக்­குற்­றச்­சாட்­டுகள் ஆய்ந்­த­றிந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­வை­யல்ல. மாறாக எங்கோ யாராலோ ஊகங்களின் அடிப்­ப­டையில் முன்­மு­டி­வு­க­ளோடு தயாரிக்கப்பட்டவைகள் என்றே புல­னா­கின்­றது.


இந்த வகையில் இக்குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கிறேன். இதே குற்றச்சாட்டுக்கள் நன்கு விசாரிக்கப்பட்ட நிலையில்தான் நான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Vidivelli



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3cCCS7q
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!