இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி?? அமைச்சர் ஆலோசனை
-Trueceylon-
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை சில கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.
அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு படகுகளுக்கு மாத்திரமே இந்த அனுமதி பத்திர நடைமுறை செலுப்படியாகும். ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போட்டம் ட்ரோலரிங் படகுகளுக்கு இந்த அனுமதி பத்திர நடைமுறை செலுப்படியாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனினும் இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே அனுமதி வழங்க யோசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.
இதற்கு இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்க தான் யோசனையை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மீனவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலேயே இந்த திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3u2oTNU
via Kalasam
Comments
Post a Comment