மாளிகைக்காட்டு பிரதேசத்தில் சுகாதார தரப்பினர் அதிரடி : சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை !
நூருல் ஹுதா உமர்
நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வஸீரின் ஆலோசனைக்கு இணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் டீ. வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர்களான கே.ஜெமீல், எம்.எம்.எம். சப்னூஸ் ஆகியோர் இணைந்து நேற்று (29) மாலை திடீர் பரிசோதனை நடவடிக்கையில் இறங்கினர்.
இதன்போது காரைதீவு, மாளிகைக்காடு ஆகிய இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் இதன்போது திடீர் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு அந்த உணவகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2RcS037
via Kalasam
Comments
Post a Comment