திருடப்பட்டிருந்த, 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப் பட்டன.




இரத்தினபுரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


அண்மையில் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் ஐவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


நேற்று சனிக்கிழமை இவர்களிடம் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும் 12 முச்சக்கரவண்டிகளும் 5 மோட்டார் சைக்கிள்களும் மேலும் சில வாகனங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. இவை கொள்ளையிடப்பட்ட வாகனங்கள் என்று தெரியவந்துள்ளது.


அதற்கமைய இதுவரையில் 25 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே யாருடையதேனும் முச்சக்கரவண்டிகள் கொள்ளையிடப்பட்டிருந்தால் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2TvQIRR
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?