ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் (FR) வழக்கு, இன்று 28.05.2021 வெள்ளிக்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் முதற்தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, உயர் நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான கடந்த ஈஸ்டர் தாக்குதல் ஜானாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த கொளரவ நீதியரசர் ஜனக்த சில்வா, தான் இந்த வழக்கில் இருந்து தவிர்த்து கொள்வதாகவும், புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது .
எனவே, இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் 04.06.2021 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜராகினர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3i00eHg
via Kalasam
Comments
Post a Comment