கொரோனாவில் உணவின்றி தவித்தவர்களுக்கு மனிதாபிமான உதவி !!
நூருள் ஹுதா உமர்,
கொரோனா தொற்றியினால் அமுலில் உள்ள பயணத்தடை கட்டுப்பாட்டினால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு கல்முனை பிராந்திய ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். ரோஷன் அக்தரினால் இன்று உணவு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் உணவகங்கள் மூடப்பட்டு யாசகர்கள் பலர் உணவு இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இன்று (31) செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அணுகிய யாசகர்கள் உணவின்றி சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்பு முகைடீன் ரோசன் அக்தர் தனது மாதாந்த கொடுப்பனவில் இருந்து பயணத்தடை யினால் நிர்க்கதியான 20 யாசகர்களுக்கு உணவுகளை வழங்கி வைத்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34xEU3F
via Kalasam
Comments
Post a Comment