அதிரடி மாற்றம்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற்றது அரசு..!
ஆறு வளைகுடா நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி,
கட்டார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,
சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்டிருந்த பிரஜைகள் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3A6Jp3M
via Kalasam
Comments
Post a Comment