மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம்
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளாத்தாப்பிட்டி கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், சமூர்த்தி பெறும் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட 150 பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கிராமங்களில் உள்ள குடும்பங்களில் நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனை கேட்டறிந்து கொண்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் குழுவினர் மனிதபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தார்கள். இன் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் ஸ்ரீமத் சுவாமி தக்ஸஜானந்தஜீ மஹராஜ், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக வேதநாயகம் ஜெகதீசன், இராமகிருஷ்ண மிஷன் குழுவினர், பயனாளிகள் என குறிப்பிட்ட அளவானோர் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3Ad6baa
via Kalasam
Comments
Post a Comment