சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! ஆனால் சமூக ஊடகங்களில் வீராப்பு வசனங்களை பேசி தமிழ்,முஸ்லிம் என்னும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்!
சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் - ஆனால் சமூக ஊடகங்களில் வீராப்பு வசனங்களை பேசி தமிழ்,முஸ்லிம் என்னும் தமிழ் பேசும் உறவை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்!
சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நூறுவீதம் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அது அரசியல் கடந்த ஒரு நீதி சார்ந்த விடயம் அதற்காக வேண்டி என்னுடைய ஜனனம் அறக்கட்டளை ஊடாக சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமான உதவிகளை ஜனநாயக அடிப்படையில் மேற்கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளோம்.
ஆனால் தற்போது பார்க்கப் போனால் சமூக வலைதளங்களை திறந்தாலே இச்சிறுமியின் விவகாரத்தை வைத்து இரு தரப்பினரும் மாறி மாறி அரசியல் செய்வதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை திருநாட்டை பொருத்தமட்டில் மதங்களால் தமிழ் ,முஸ்லிம் என்று வேறுபட்டாலும்
மொழியினால் தமிழ்,முஸ்லிம் ஆகிய சமூகங்கள் ஒன்றாக பிணைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இரு சமூகங்களுக்கிடையில் பாரிய தொப்புள்கொடி உறவு இருக்கிறது. இந்த விவகாரத்தை வைத்து சமூக ஊடகங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காக இதை அரசியல் மயமாக்கி தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்க தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் வீராப்பு வசனம் பேசி கொள்பவர்களிடம் மிகப் பணிவாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தச் சிறுமியின் விவகாரமானது தமிழ் முஸ்லிம் சிங்களம் என்பதைத் தாண்டி அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்களும் நீங்களும் குரல் கொடுக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட அபிலாசைகளுக்குகாகாவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் உங்கள் குரல்களை
சமூக ஊடகங்களில் எழுப்புவதை சற்று சிந்தித்துப் செயற்படுங்கள்.
அவ்வாறான ஒரு செயற்பாடு தொடர்ந்து சென்றாள் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு இடையிலே அதிக விரிசலை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் ஒன்று என்னுள் தோன்றுகிறது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3i8zi7M
via Kalasam
Comments
Post a Comment