ஜப்பானின் நிலையிலிருந்த இலங்கை தற்போது ஆப்கானிஸ்தான் நிலைக்கு சென்று விட்டது - முன்னால் பிரதமர் ரனில்
ஜப்பானின் நிலைமையில் இருந்த இலங்கை, தற்போது ஆப்கானிஸ்தான் நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், அனைவரும் ஒரே கொள்கையோடு செயற்பட வேண்டும். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நாட்டு மக்களுக்கு விரைவாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
கூட்டணி ஒன்று அமைப்பதால் மாத்திரம் வெற்றிபெற்றுவிட முடியாது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஒன்று உள்ளதா? என்றே மக்கள் பார்ப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றாலும், கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த கப்பலாலும் நாட்டுக்கு பாரியப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள போதிய அந்நிய செலாவணி இல்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களே முதலில் அவசியம் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3BSuSK1
via Kalasam

Comments
Post a Comment