முஹம்மத் நபி ( ஸல் ) அவர்கள் மீது அவதூறு பரப்பிய காரைதீவு தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு...!
புனிதமான இறைத்தூதர் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களை அவதூறு கொண்டு பதியப்பட்ட முகநூல் பதிவொன்றினை தனது முகநூலில் பதிவு செய்து இனவாதத் தன்மையை வெளிப்படுத்திய காரைதீவு தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிரில் அவர்களுக்கு எதிராக ICCPR சட்டத்தின் கீழ் இன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறித்த பதிவில் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இனவாதக் கருத்தினை மையப்படுத்தி பதிவு செய்யப்பட்ட பதிவினை தனது கருத்தாக பதிவிட்டுள்ளார்.
இவ் பதிவிற்கு எதிராக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான்,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீல், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான பஸ்மீர், ரனீஸ், ஜலீல், இஸ்மயீல், தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளர் ஹுதா உமர் அரசியல் பிரமுகர் கலீலுர்ரஹ்மான் மற்றும் இப்றாஹீம் பொது மக்கள் என பலர் இன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
பல்லின மக்கள் வாழும் பிரதேசத்தின் தலைமை இவ்வாறு இனவாதியாக செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும். தான் செய்த குற்றத்திற்கு பகிரங்க மன்னிப்பினை கேட்காதவிடத்து பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வண்ணம்,
அமீர் அப்fனான்
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்.
இலங்கை.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2VcAdv0
via Kalasam
Comments
Post a Comment