1904 என்ற தொலைபேசி சேவைக்கு இதுவரை சுமார் 32 ஆயிரம் குறுந்தகவல்கள்
கொவிட் 19 நோய் தொடர்பான ஒன்றிணைந்த சேவை பொறிமுறைக்குரிய 1904 என்ற தொலைபேசி சேவைக்கு இதுவரை சுமார் 32 ஆயிரம் குறுந்தகவல்கள் கிடைக்துள்ளன.
இதன்மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு உதவ முடிந்திருப்பதாக இந்த நிறுவனத்திற்கு பொறுப்பான பேராசிரியர் அதுல சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்த பொறிமுறைக்குரிய 247 என்ற அவசர தொலைபேசி இலக்க சேவையுடன் தொடர்பை ஏற்படுத்திய நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் ஆகும்.
இவர்களில் அவசர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1000 ஆகும். இந்த கொவிட் ஒன்றிணைந்த சேவை 24 மணிநேரமும் செயல்படுவதாக பேராசிரியர் அதுல சுமதிபால குறிப்பிட்டார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3uvio7J
via Kalasam
Comments
Post a Comment