இரவு நேர ஊரடங்கு அமுல் - விசேட அறிவிப்பு வெளியானது
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ,சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.
இத்துடன் , உற்சவங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை பதிவு திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மாத்திரமே கலந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்களில் யன்னல்கள் திறந்து பயணிப்பது அவசியமானது என அந்த வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குளிரூட்டப்பட்ட பஸ் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,சமூக இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் முகக் கவசங்களை உரிய வகையில் அணிதல் கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகை அலங்கார நிலையங்களுக்கு (சலூன்) பிரவேசிக்கும் போது, நேரத்தை ஒதுக்கி, அங்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ,திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் , பாடசாலைகளை உரிய சுகாதார வழிமுறைகளுக்கு அமைய திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2Y0eh7y
via Kalasam
Comments
Post a Comment