நாளை சில பகுதிகளில் 12 மணி நேரத்திற்கு நீர்வெட்டு
களனி முதுன்கொட (புதிய கண்டி வீதி) நீர்வழிப்பாதையின் திருத்த பணிகள் காரணமாக நாளை(01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சியம்பலாபேவத்த, பியகம, தெல்கொட, உடுபில – அனுருமுல்ல, கேரகல, தெமலகம, கதுபொட, தெனடன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்போ, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bsX2PM
via Kalasam
Comments
Post a Comment