இஸ்லாமிய திருமணம் தொடர்பான இறுதி சட்ட வரைபு 2 வாரங்களில் அமைச்சரவைக்கு
இஸ்லாமிய திருமண – விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை இரத்து செய்தல் தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து புதிய சட்ட வரைபு தயாரிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமண வயதெல்லையை 18 ஆக மாற்றுதல், திருமணத்தைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குதல் மற்றும் அதற்குப் பெண்களின் கையொப்பத்தினையும் பெற்றுக் கொள்ளுதல், காதி முறைமையை இல்லாது செய்தல், சிறுவயது திருமணத்தைத் தடுத்தல், காதிகளாகப் பெண்களையும் நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் உள்ளிட்ட யோசனைகள் அதில் அடங்குகின்றன.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/317NbwK
via Kalasam
Comments
Post a Comment